தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya Vamsam 2: ’நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது.. ’வருகிறது சூர்ய வம்சம் 2

Surya Vamsam 2: ’நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது.. ’வருகிறது சூர்ய வம்சம் 2

Aarthi V HT Tamil

May 02, 2023, 01:32 PM IST

google News
சூர்ய வம்சம் 2 படம் குறித்து நடிகர் சரத்குமார் ஓப்பனாக பேசி உள்ளார்.
சூர்ய வம்சம் 2 படம் குறித்து நடிகர் சரத்குமார் ஓப்பனாக பேசி உள்ளார்.

சூர்ய வம்சம் 2 படம் குறித்து நடிகர் சரத்குமார் ஓப்பனாக பேசி உள்ளார்.

90 ஸ் கிட்ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக பார்த்து வளர்ந்த படங்களில் ஒன்று சூர்ய வம்சம். 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் சரத்குமார் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது பாடலில் சரத்குமார் ஒரே பாட்டில் பேருந்துகள் வைத்திருக்கும் முதலாளியாக மாறிவிடுவார். பாடல் முடிவதற்குள் தேவயானியும் கலெக்டர் ஆகிவிடுவார். அதனாலேயே இந்த பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.

இந்த நிலையில் சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சூர்ய வம்சம் 2 படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் நடித்து வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பட கதை தயாராகியவுடன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணி தொடங்கும். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது நிறைவாக இருந்தது.

கிளைமாக்ஸ் காட்சியில் என்னை பற்றி நந்தினி பேசும் வசனம் மூலம் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் வெளிப்பட்டு உள்ளது.

நான் 40 வருடங்களாக கலை உலகத்தில் பயணிக்கிறேன். கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து இருக்கிறேன். மற்ற இளம் கதாநாயகர்களுடனும் இணைந்து நடிக்கிறேன்.

வாரிசு, பொன்னியின் செல்வன் படங்களில் நல்ல வேடங்கள் அமைந்தன. ருத்ரன் படத்தில் நடித்த வில்லன் வேடத்துக்கும் பாராட்டு கிடைத்தது. பிறமொழி படங்களிலும் நடிக்கிறேன். அனைத்து மொழி படங்களிலும் எனது சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறேன். 

இதுவரை 145 படங்களில் நடித்து விட்டேன். தற்போது 24 படங்கள் கைவசம் உள்ளன. 150 ஆவது படமாக ஸ்மைல்மேன் தயாராகிறது. நான் பல சோதனைகளை கடந்து வந்து இருக்கிறேன். மனதில் வலிகள் உள்ளன. அதை எல்லாம் தாண்டி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி