Saranya Ponvannan: ஆபாச பேச்சு, கொலை மிரட்டல்.. பக்கத்து வீட்டுப்பெண் கொடுத்த புகார்.. சரண்யா மீது பாய்ந்த வழக்கு?
Apr 01, 2024, 05:02 PM IST
பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. காரணம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தொடர்ந்து பல்வேறு மொழிகளில், பல திரைப்படங்களில் நடித்த இவருக்கு, தென் மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஏற்று நடித்த அம்மா வேடம் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
அத்துடன் அந்தத்திரைப்படத்திற்காக சரண்யாவிற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து களவாணி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனின் மனைவியான இவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வரும் ஸ்ரீதேவி என்பவரும் வசித்து வருகிறார்.
இவர் தன்னுடைய வீட்டின் கதவை திறக்கும் போது அது, சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரண்யாவின் காரின் மிக அருகில் கதவு சென்றதாக சொல்லப்படுகிறது. இதில் சரண்யாவுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் புகுந்து ஆபாசமாக பேசி, திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீதேவி, இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த சரண்யா மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை மணந்தவர் சரண்யா. 1995 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
சரண்யா மற்றும் பொன்வண்ணனின் குழந்தைகள் பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி. சரண்யா பொன்வண்ணனின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த விவரங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
அவர் கூறுகையில், “ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை மிகவும் முக்கியமானது. ஆனால் என் வீட்டில் உள்ள பூஜை அறை அதைவிட சிறப்பு வாய்ந்தது. என் கணவர் இந்து. நான் ரோமன் கத்தோலிக்கன். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் எங்கள் வீட்டில் மதம் பற்றி ஒரு பேசவில்லை.
எந்த மதம் என்று கேட்டால் குழந்தைகள் பதில் சொல்லாமல் சிரிக்கிறார்கள். நீ சீனியைக் கல்யாணம் பண்ணினாலும் நான் நல்லா தான் இருக்கேன் என்று கேலி செய்தேன். நாங்கள் திறந்த நிலையில் இருக்கிறோம். அனைவரும் கடவுள், நாம் ஒன்று.
அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வேன். பூஜை அறையில் அனைத்து கடவுள்களின் புகைப்படங்கள் உள்ளன. பூஜையறையில் இருக்கும் இயேசுவின் படம் என் கணவர் வரைந்தது. அவர் இந்துவாக இருந்தாலும், முன்பை விட அதிகமாக பைபிளைப் படித்தவர். அவர் மிகவும் நல்ல மனிதர். அப்படிப்பட்ட கணவரைப் பெற நான் அதிர்ஷ்டசாலி.
எனது திருமணத்திற்கு முன்பே என் அம்மா இறந்துவிட்டார். அம்மா எனக்கு கடவுள். என் குடும்பத்தில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் அம்மா தான் காரணம். கடவுளுடன் அம்மாவின் புகைப்படம் வைக்கக் கூடாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை
உங்கள் அம்மா படத்தில் வருவது போல் இருக்கிறாரா என குழந்தைகளிடம் கேட்பார்கள். நிஜத்தில் சினிமா அம்மா மாதிரி தான் நானும். மிகவும் ஜாலி ஆனால் ஒழுக்கமும். சினிமாவில் வரும் அம்மா கேரக்டர்களைப் பார்த்து என்னைப் போன்ற அம்மா வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். இதை தன் குழந்தைகள் பெருமையுடன் சொல்வார்கள் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்