தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அவ்வளவும் தண்டம்.. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்ல..” - போகிற போக்கில் நாக சைதன்யாவை வெளுத்த நடிகை சமந்தா!

“அவ்வளவும் தண்டம்.. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்ல..” - போகிற போக்கில் நாக சைதன்யாவை வெளுத்த நடிகை சமந்தா!

Nov 25, 2024, 12:39 PM IST

google News
சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் தொடர்பாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்திற்கு கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை சாடி பேசி இருக்கிறார்.
சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் தொடர்பாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்திற்கு கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை சாடி பேசி இருக்கிறார்.

சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் தொடர்பாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்திற்கு கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை சாடி பேசி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா நாக சைதன்யாவுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்றார். ஏற்கனவே மயோசிடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்த அவர் அதனையும் வெளிப்படையாக அறிவித்தார். தொடர்ந்து அதன் காரணமாக சினிமாவில் இருந்தும் பிரேக் எடுத்தார். இதையடுத்து அவரது கம்பேக் திரைப்படமாக அண்மையில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. 

இந்தப்படம் தொடர்பான புரோமோஷனுக்காக அமேசான் ப்ரைம் சேனலுக்கு வருணும், சமந்தாவும் பேட்டிக்கொடுத்தனர். ரேபிட் ஃபையர் ரவுண்டாக அமைந்திருக்கும் அந்த நேர்காணலில் ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.

நாக சைதன்யா

முற்றிலும் பயனற்ற ஒன்றிற்காக

அப்போது வருண் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்றிலும் பயனற்ற ஒன்றிற்காக செய்த அபத்தமான செலவு என்றால் எதனைச் சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு துளியும் தாமதிக்காமல் பதில் சொன்ன சமந்தா, என்னுடைய முன்னாள் கணவருக்கு நான் செய்த செலவுகள் என்றவர் உடனடியாக இந்த டாப்பிக்கை விட்டு நாம் சீக்கிரம் சென்று விடலாம் என்று கூறி அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

சமந்தா

முன்னதாக, இந்தப்படம் தொடர்பான பேட்டியில் சமந்தா தாய்மை குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.

சிட்டாடல் ஹனி பன்னி சீரிஸில் சீக்ரெட் ஏஜண்டாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சமந்தா நடித்திருக்கிறார். இந்த நிலையில், டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்த சமந்தா, குழந்தைக்கு தாயாக நடித்தது குறித்தும், அதை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒப்பிட்டும் பேசி இருக்கிறார்.

அம்மாவாக மாற வேண்டும்

இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது ஒன்றும் அவ்வளவு காலதாமதமாகிவிட வில்லை. எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் எப்போதுமே ஒரு தாயாக மாற வேண்டும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறேன். அது மிகவும் அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் தாயாக மாற முடியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

மேலும் தற்போது சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி பேசிய சமந்தா, “ நான் தற்போது என்னுடைய வாழ்க்கையின் நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஆனால் நான் முன்பு ஒரு சாதரண நாளுக்காக இவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்ததில்லை. ஆனால் நான் தற்போது இருக்கிறேன்” என்று பேசினார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி