Robo Shankar : ரோபோ சங்கர் லேட்டஸ்ட் வீடியோ.. மாஸாக இருந்தாலும் கவலையில் ரசிகர்கள்.. இதோ பாருங்க வீடியோ!
Apr 16, 2023, 09:52 AM IST
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா இன்ஸ்டாகிராமில் தனது தந்தையின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். பின்னர் தமிழ் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகர் விஷாலின் 'இரும்புத்திரை' அஜித்தின் 'விஸ்வாசம்', தனுஷின் 'மாரி', சிவகார்த்திகேயனினி மிஸ்டர் லோக்கல், ஹீரோ உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் காமெடியனாக நடித்துள்ளார்.
ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்கிற மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தி உடன் விருமன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் போடுவது, புகைப்படங்களை பதிவிடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரஜா பதிவிட்ட ரீல்ஸ் வீடியோவில் ரோபோ சங்கர் மெலிந்த தோற்றத்துடன் இருப்பதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு? ஏதேனும் உடல்நலப் பிரச்சனையா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, அவருக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை, அவர் படத்துக்காக இப்படி உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திரஜா இன்ஸ்டாகிராமில் தனது தந்தையின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரோபோ சங்கர் மேக்கப் போட்டு கொண்டு வேட்டி சட்டையில் வீரா வீரா என்ற பாடலுக்கும் மாஸாக நடந்து வருவது போல் உள்ளது.மேலும் அந்த பதிவில்” He is back…with lots of power, energy and blessings…”என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் நீங்கள் முன்பு இருந்தது தான் நான்றாக இருந்தது. இந்த லுக் உடல் நலம் சரியில்லாத நபர் போல உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்