தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Robert Master Interview That Vanitha Is The Reason For Going To Bigg Boss House

Robert Master: ‘வனிதா தான் பிக்பாஸூக்கு அனுப்பினார்’ ராபர்ட் மாஸ்டர் ஓப்பன்!

Dec 06, 2022, 05:34 PM IST

Robert master about Vanitha: ரசித்தா, என்னை பயன்படுத்தி விளையாடவில்லை. அவர் அப்படி இல்லை. ஒரு இலையிடம் கூட ஒரு மணி நேரம் பேசுவார் அவர்.
Robert master about Vanitha: ரசித்தா, என்னை பயன்படுத்தி விளையாடவில்லை. அவர் அப்படி இல்லை. ஒரு இலையிடம் கூட ஒரு மணி நேரம் பேசுவார் அவர்.

Robert master about Vanitha: ரசித்தா, என்னை பயன்படுத்தி விளையாடவில்லை. அவர் அப்படி இல்லை. ஒரு இலையிடம் கூட ஒரு மணி நேரம் பேசுவார் அவர்.

பிக்பாஸ் முன்னாள் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமாருடன் இதற்கு முன் நெருக்கமாக இருந்த ராபர்ட் மாஸ்டர், அதன் படி அவரிடமிருந்து விலகினார். நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று, வெளியேற்றப்பட்ட அவர், இணையதளம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kubera Nagarjuna: 'குபேரா' மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கும் நாகார்ஜூனா.. தரமான ஃபர்ஸ்ட் லுக்.. ரட்சகனை மறக்க முடியுமா?

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா

அப்போது அவர் பேசியவை இதோ:

‘‘வனிதாவிடம் போன் பண்ணி, ‘பிக்பாஸ் போலாமா, வேண்டாமா’ என்று கேட்டேன். ஏனென்றால், அதற்கு முன் அவர் தான் பிக்பாஸ் போயிருந்தார். வனிதா விஜயகுமார் புரொடக்‌ஷன் என்ற பெயரில் 10 வருசமா தயாரிப்பு நிறுவனம் வெச்சிருக்காங்க.

அப்போதெல்லாம் படம் பண்ணவில்லை. ஆனால், என்னுடன் படம் பண்ணாங்க. எதனால்? நான் அந்த நேரத்தில் பிரபலமா இருந்ததால். வனிதா அப்போது பிரபலமாக இல்லை.

அதே மாதிரி தான், பிக்பாஸில் வனிதா சென்று வந்து பிரபலமாக இருந்தார். நான் யாரிடத்திலும் பேசி பழக்கம் இல்லை. சாண்டியிடம் நான் அதிகம் பேசமாட்டேன். அந்த முறைக்கு, வனிதாவிடம் போன் செய்து கேட்டேன். ‘போடா… நல்லா இருக்கும். நீ ஹீரோவா காமெடியா எப்படி மாறுவேங்கிறது உன் கையில இருக்கு’ என்று கூறினார்.

வனிதா அப்படி சொன்ன பிறகு தான், நான் போகலாம் என முடிவு செய்தேன். அதன் பிறகு தான் போனேன். அந்த உதவியை வனிதா தான் செய்தார். அவர் தான் என்னை ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தார். ‘போனா காலியாகிடுவ…’ என்று அவர் கூறியிருந்தால், நான் போயிருக்க மாட்டேன்.

ராபர்ட் மற்றும் ரச்சிதா - கோப்புபடம்

நான் பிக்பாஸில் இருந்த போது, எனக்கு ஒரு மோதிரம் வந்தது. அதை பார்த்து நான் பயந்துட்டேன். என்னுடைய பெங்களூரு காதலி உடைய மோதிரம் அது. இரண்டு, மூன்று வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம். நான் தான் அந்த மோதிரத்தை அவருக்கு கொடுத்தேன்.

திடீர்னு பார்த்தால், அந்த மோதிரம் உள்ளே வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்த மூக்குத்தி மேட்டர், ஒருவேளை தப்பா வெளியே போகுதோ, என பயந்துவிட்டேன். அதனால் தான் அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று நினைத்தேன்.

ஆனால், நான் என் காதலியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தான் உள்ளே வந்தேன். சண்டை போட்டால் போடுவேன், பெண்கள் வந்தால் பார்த்து பேசுவேன், அதையெல்லாம் தப்பா நினைக்காதே என்று தான் சொல்லிவிட்டு வந்தேன் .

‘அவரும், நீங்க போய்டு வாங்க, நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்’ என்று தான் கூறி அனுப்பினார். வெளியே வந்ததும், அது தான் நடந்தது. வந்ததும், மோதிரம் அனுப்பியதற்காக போன் செய்து கத்தினேன்.

‘நான் அப்படி நினைத்து கொடுத்து அனுப்பவில்லை; உங்களுக்கு ஆதரவா நான் இருக்கேன் என்பதை குறிக்கவே அனுப்பினேன்’ என்று அவர் கூறினார். என் காதலி என் மீது மரியாதை வைத்திருந்தது உண்மை தான். நான் தான் தேவையில்லாமல் பயந்துவிட்டேன்.

ராபர்ட் மாஸ்டர்

நான் பேனா கிடைத்தால் எப்போதும் ஆர்.ஏ.ஜெ.க்யூ என எழுதிக்கொண்டிருப்பேன். டாட்டூவும் குத்தியிருக்கிறேன். அதற்கு அர்த்தம் தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆர் என்றால் நான் ராபர்ட், ஏ என்றால் என் அப்பா ஆண்டனி, ஜெ என்பது என் காதலி பெயர், க்யூ என்பது என் மகளாக ஏற்ற குயின்சி. மற்றபடி இதில் வேறு எந்த வதந்திக்கும் இடமில்லை.

பிக்பாஸ் வீட்டில் ஷிவினை அதிகம் கலாய்த்தது நான் தான். நான் பேசவில்லை என்றால் அவர் கோபித்துக் கொள்வார். அமுதவாணன் தூக்கத்தில் பேசுவார். அதை தான், பேய் என அப்படியே கிரியேட் பண்ணி, பயமுறுத்தினான்.

ரசித்தா, என்னை பயன்படுத்தி விளையாடவில்லை. அவர் அப்படி இல்லை. ஒரு இலையிடம் கூட ஒரு மணி நேரம் பேசுவார் அவர். திடீர்னு தண்ணீருடன் பேசிக் கொண்டிருப்பார். ஷிவின் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றால் எனக்கு சந்தோசம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.