போற போக்குல ரஜினிக்கும் ஒரு போடு.. உசாரய்யா உசாரு.. விஜய்யை அலெர்ட்டாக்கும் புளு சட்டை மாறன்..
Dec 16, 2024, 07:16 AM IST
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு அறிவுரை சொன்ன கையோடு ரஜினியின் கட்சி குறித்தும் பேசி வம்பிழுத்துள்ளார் புளு சட்டை மாறன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் சர்ச்சையைக பேசியதால், அவரை கட்சி நிர்வாகம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்த நிலையில், நேற்று அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
கூட்டணிக்குள் சர்ச்சை ஏற்படுத்தி ஆதவ் அர்ஜூனா
ஏற்கனவே, விஜய் ஆட்சியில் அதிகராம் தருவது குறித்து பேசியது வைரலான நிலையில், பலரும் விஜய் விசிகவை தங்கள் கட்சியின் கூட்டணிக்கு அழைக்கிறார் எனக் கூறி கேள்வி எழுப்பி வந்தனர். இதனால், இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க திருமாவளவன் பங்கேற்க இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியையே தவிர்த்திருந்தார்.
நிலைமை இப்படி இருக்க, அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் தவிர்த்த புத்தக விழாவில் விஜய்யுடன் சந்தித்து பேசியது மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகள் குறித்தும் சர்ச்சையாக பேசினார்.
மறைமுக செயல்திட்டம் இருக்கிறது
ஆரம்பத்தில் இது அவரது தனிப்பட்ட கருத்து என சமாளித்த விசிக அரசியல் அழுத்தம் தாங்க முடியாத காரணத்தால் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியது.
இந்த சமயத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட சமயத்திலும் தொடர்ந்து அரசியல் கருத்து பேசி வருகிறார் என்றால் நிச்சயம் அவருக்கு ஒரு மறைமுக செயல்திட்டம் இருக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.
அரசியல் பயணம் தொடரும்
இதனால், தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார் ஆதவ் அர்ஜூனா. அத்தோடு நில்லாமல் தன் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் பேசிவரும் நிலையில், நிச்சயம் அவர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் போய் இணைய உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பிரபல திரைப்பட விமர்சகரான புளு சட்டை மாறன், விஜய்க்கு அரசியல் அறிவுரை வழங்கியுள்ளார்.
கட்சியை நோக்கி ஸ்லீப்பர் செல் ஏஜன்ட்
இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், "துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே..
விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் வரவுள்ளார். அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள்.
உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் லீக் செய்யப்படும். தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்.
படத்தில் வருவது போல.. நிஜத்திலும் அலர்ட்டாக இருந்து...இவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே.. ஆட்சியை பிடிக்க முடியும்.
தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடியது ஏன் தெரியுமா?
கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்கில்.. தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்த பிறகுதான்.
ஆகவே..உஷாரய்யா... உஷாரு." எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை கலைத்தது ஏன்?
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ரஜினி, தான் ஆரம்பித்த நினைத்த கட்சிக்குள் பல ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக கிடைத்த தகவலால் தான் கட்சியை உதறிவிட்டு சினிமா பக்கம் திரும்பினார். இதனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் கட்சிக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற களைகளை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
உஷாரய்யா உஷாரு
மேலும், மறைமுகமாக ஆதவ் அர்ஜூனாவை ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் என்றும் விமர்சித்து தொடர்ச்சியாக விஜய் கட்சிக்கு நிறைய ஸ்லீப்பர் செல்கள் வரவுள்ளனர் அதனால் உஷாராக இருக்குமாறு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்