தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ravinder Chandrasekar: சொர்கத்தை உணர்வேன் - மனைவி குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர்

Ravinder Chandrasekar: சொர்கத்தை உணர்வேன் - மனைவி குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர்

Aarthi V HT Tamil

Feb 12, 2023, 09:53 PM IST

google News
தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு அடிக்கடி தங்களது புதிய புகைப்படங்களை வெளியீட்டு டாப் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மனைவி மகாலட்சுமியினுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் ரவீந்திரன் சந்திரசேகரன்.

அதில், ”நீ அதிகம் பறக்கும் போது மேகத்தையும் வானத்தையும் காண்பாய். நீ அதிகம் சிரிக்கும்போது நான் என்னுள் சொர்கத்தை உணர்வேன். மகிழ்ச்சியா இருடி போண்டா கோழி” என பதிவிட்டு உள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு பதிலளித்துள்ள மகாலட்சுமி, ''என் காதலே, இந்த உலகத்தின் பெருமை மிகு பெண்ணாக மாற்றியதற்கு நன்றி'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை மகாலட்சுமியை, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார்.

ரவீந்தரும், திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இருவருமே காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பணத்திற்காகத் தான் ரவீந்தரை, மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் எனப் பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறனர். அத்துடன் திருமணத்திற்குப் பிறகு மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் மாறி மாறி யூ-ட்யூப், செய்தி சேனல்களுக்கு இண்டர்வியூ கொடுத்து வந்தனர். இவர்களின் திருமணத்துக்கு ஒருபுறம் வாழ்த்தும், மறுபுறம் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி