RIP DilliBabu: ‘ராட்சசன்’ பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்.. காரணம் என்ன தெரியுமா?
Sep 09, 2024, 09:46 AM IST
RIP DilliBabu: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.
ராட்சசன், மரகதநாணயம், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 50. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த அவர், சிகிச்சை பலன்றி இறந்து போனதாக தகவல்கள் கூறுகின்றன.
அவரது நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, அவர் தோராயமாக அதிகாலை 12.30 மணியளில் உயிரிழந்ததாகவும், அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்றும் கூறினர். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காலை 10.30 மணி அளவில் பெருங்குளத்தூரில் இருக்கும் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்படும் அவரது உடல் மாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.
நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும்
அவரது இறப்பு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான டில்லி பாபு இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் துயருற்றேன்.
அவரால் பல இளம் மற்றும் புதிய திறமைசாலிகள் பயன் அடைந்திருக்கின்றனர். இது திரைத்துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
விதி அவரை அழைத்துச் சென்று விட்டது.
இது குறித்து படத்தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ காலையில் அதிர்ச்சிகரமான செய்தியோடு எழுந்து இருக்கிறேன். என்னுடைய நண்பர் இழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன்.
நட்பாகவும், சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராகவும் டில்லி பாபு இருந்திருக்கிறார். அவருக்கு நிறைய கனவுகள் இருந்தன. ஆனால் விதி அவரை அழைத்துச் சென்று விட்டது. அவரை இழந்து வாடும் அவரது நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
எனக்கு ஒரு வாழ்க்கையை
அவர் இறப்பு குறித்து அவரால் மரகத நாணயம் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் சரவணன், “ டில்லிபாபு சார்.. 💔
மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் எனக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவர்..
ஒரு நல்ல மனிதரை..
ஒரு நல்ல தயாரிப்பாளரை..
ஒரு சாதனையாளரை..
தமிழ் திரையுலகம் இழந்து விட்டது..
மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது சார்..” என்று பதிவிட்டு இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்