தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: கலைஞர் வசனமா.. தெறித்து ஓடிய ரஜினி

Rajinikanth: கலைஞர் வசனமா.. தெறித்து ஓடிய ரஜினி

Aarthi Balaji HT Tamil

Jan 07, 2024, 08:43 AM IST

google News
கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கும் தனக்குமான பழக்கம் பற்றி பேசினார்.
கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கும் தனக்குமான பழக்கம் பற்றி பேசினார்.

கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கும் தனக்குமான பழக்கம் பற்றி பேசினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை தமிழ்த்திரையுலகம் விழாவாக எடுத்துள்ளது.

இதனையொட்டி, சென்னையில் நேற்று ( டிச. 6) பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின் ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதே போல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், “கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என தெரியவில்லை. எப்பவுமே ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. அதே போல் பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது. கலைஞருக்கு இது இரண்டுமே இருந்தது. 

கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் தான் 1955 ஆம் ஆண்டு கோபாலபுரம் வீட்டை வாங்கினார். அந்த வீட்டில் தான் அவர் கடைசி வரை இருந்தாரு. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் புட்டபர்த்தி சாய் பாபாவே கலைஞர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். 

 அவர் எழுதிய கடிதங்களை கொஞ்சம் படித்துள்ளேன். சில கடிதம் படிக்கும்போது கண்ணீர் வரும். சில கடிதங்கள் படிக்கும்போது கண்ணுல நெருப்பு பறக்கும்.

ஒரு தயாரிப்பாளர் கலைஞரிப் தீவிர ரசிகன். அவருடன் ஒரு படம் செய்தேன். அந்தத் தயாரிப்பாளர், ‘நம்ம படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் படத்திற்கு கலைஞர் நமக்கு வசனம் எழுதித்தரேன்னு சொன்னாரு. உடனே நான் கலைஞரோட வசனங்கள் கஷ்டமாக இருக்கும். நான் கலைஞர் வசனம் பேசமாட்டேன்னு சொல்லிட்டேன். இதை கோபாலபுரம் சென்று சொன்னேன்.

என் படத்தின் பிரிவியூ ஷோ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் தேர்தல் வாக்குப்பதி நடந்தது. ஓட்டு போட்ட பிறகு அந்த நடிகர் கிட்ட பத்திரிக்கையாளர்கள் யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு கேட்க நான் இரட்டை இலை என பதில் சொல்லி விட்டார்.

இது பத்திரிக்கைகளில் வெளியாகி மிகப்பெரிய செய்தியாகி விட்டது. அதற்கு பிறகு கலைஞரை ப்ரிவியூ ஷோவில் பார்க்க சங்கடமான சூழல் இருந்தது. அதனால் குளிர் காய்ச்சல் என சொல்லி அந்த நிகழ்வுக்கு செல்லாமல் தவிர்த்தேன்.

ஆனால் நீங்க வந்ததால் தான் படம் ஸ்டார்ட் பண்ண வேண்டும் என கலைஞர் சொன்னார். பிரிவியூ ஷோ பார்க்க உள்ளே போனதும் கலைஞர் பக்கத்துல ஒரு சேர் காலியா இருந்தது. அவர் வாங்க குளிர் ஜூரம் சூரியன் பக்கத்துல அமர்ந்தால் போய்விடும்’ என சொன்னார். இதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள் “ என்றார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி