Rajinikanth Salary: கவுரவ தோற்றம்.. லால் சலாம் படத்திற்காக தனது சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்ட ரஜினிகாந்த்
Feb 02, 2024, 09:55 AM IST
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸாகிறது.
சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன் படி கவுரவ தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் சொல்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்ற தகவல் வெளியாகவில்லை.
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் லால் சலாம் படத்தொல் கவுரவ ரோல் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டார்.
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது விழா மேடையில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்து இருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி.
இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்து இருக்கமாட்டார்கள், அவரைத் தவிர.
நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’ எனப் பேசி இருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பேசுபொருள் ஆனது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினி காந்த்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சங்கி என்ற வார்த்தை கெட்டவார்த்தை இல்லை. எனது மகள் சரியாகவே பேசி உள்ளார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் பார்வை என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்