தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தண்ணீர் கூட இல்லை.. அடைத்து வைக்கப்பட்ட பிரபல நடிகை.. என்ன நடந்தது?

'தண்ணீர் கூட இல்லை.. அடைத்து வைக்கப்பட்ட பிரபல நடிகை.. என்ன நடந்தது?

Aarthi Balaji HT Tamil

Jan 14, 2024, 07:53 AM IST

google News
ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தான் மாட்டிக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தான் மாட்டிக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தான் மாட்டிக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே சனிக்கிழமையன்று அதிர்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் தான் செல்ல இருந்த விமானம் தாமதமானதால், விமான நிலையத்தில் தானும் மற்ற பயணிகளும் ஏரோபிரிட்ஜில் பல மணி நேரம் பூட்டப்பட்டதாகக் கூறினார். விமான நிலையம் மற்றும் விமான சேவையின் பெயரை குறிப்பிடாமல் இன்ஸ்டாகிராமில் தனது சோதனையை பகிர்ந்து கொண்டார்.

அந்த பதிவில், " இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்று காலை 8:30 மணிக்கு எனக்கு விமானம் இருந்தது. இப்போது 10:50 ஆகிவிட்டது, இன்னும் விமானம் ஏறவில்லை. ஆனால் விமானத்தில் நாங்கள் ஏறுகிறோம் என்று கூறி அனைத்து பயணிகளையும் ஏரோபிரிட்ஜில் ஏற்றி அதை லாக் செய்துவிட்டார்கள்.

ஊழியர்களுக்கு எந்த துப்பும் இல்லை. வெளிப்படையாக அவர்களின் குழுவினர் ஏறவில்லை உள்ளே. "எந்தப் பிரச்சினையும் இல்லை, தாமதமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே வெளியே இருந்த மிகவும் முட்டாள் ஊழியர் பெண்ணிடம் பேச நான் சிறிது நேரம் தப்பித்தேன். 

இப்போது நான் உள்ளே பூட்டப்பட்டு இருக்கிறேன், நாங்கள் குறைந்தபட்சம் மதியம் 12 மணி வரை இங்கு இருப்போம் என்று எங்களிடம் சொன்னார்கள். 

அனைவரும் பூட்டப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லை, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பூட்டப்பட்டு இருந்தோம். வேடிக்கையான சவாரிக்கு நன்றி ” எனக் குறிப்பிட்டு உள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராதிகா ஆப்தேவின் பதிவை தொடர்ந்து, இண்டிகோ செய்தித் தொடர்பாளர், மும்பையில் இருந்து புவனேஸ்வர் செல்லும் விமானம் "செயல்பாட்டுக் காரணங்களால்" தாமதமானது என்றார். மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு விமானம் 6E 2301 இயக்க காரணங்களால் தாமதமானது. 

தாமதம் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் பயணிகள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் வெளியான ' மெர்ரி கிறிஸ்மஸ் ' படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முன்னதாக, 'மேட் இன் ஹெவன் 2' மற்றும் 'மிஸஸ் அண்டர்கவர்' வெப் சீரிஸ்களில் இவரது நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

ராதிகா ஆப்தே கடைசியாக தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அவரின் கவனம் முழுக்க பாலிவுட் பக்கம் மட்டுமே உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி