தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘என்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..உடல் எடை ரொம்ப சிரமத்தை கொடுத்துச்சு.. தாயாகி 2 வாரம் ஆச்சு’ - ராதிகா ஆப்தே

‘என்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..உடல் எடை ரொம்ப சிரமத்தை கொடுத்துச்சு.. தாயாகி 2 வாரம் ஆச்சு’ - ராதிகா ஆப்தே

Dec 18, 2024, 08:23 AM IST

google News
நான் தாயாகி இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய உடல் முற்றிலுமாக வேறு மாதிரியாக தெரிகிறது. என்னுடைய பார்வை முற்றிலும் வேறு கண்ணோட்டத்திற்கு மாறியிருக்கிறது. - ராதிகா ஆப்தே (vogue )
நான் தாயாகி இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய உடல் முற்றிலுமாக வேறு மாதிரியாக தெரிகிறது. என்னுடைய பார்வை முற்றிலும் வேறு கண்ணோட்டத்திற்கு மாறியிருக்கிறது. - ராதிகா ஆப்தே

நான் தாயாகி இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய உடல் முற்றிலுமாக வேறு மாதிரியாக தெரிகிறது. என்னுடைய பார்வை முற்றிலும் வேறு கண்ணோட்டத்திற்கு மாறியிருக்கிறது. - ராதிகா ஆப்தே

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் ‘தோனி’, ‘ ஆல் இன் அழகு ராஜா’, ‘வெற்றிச்செல்வன்’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், கிட்டத்தட்ட ஓராண்டாக தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மறைத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த போட்டோ ஷூட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோஷூட் தொடர்பான நேர்காணலில், நடிகை ராதிகா ஆப்தே பேசும் போது, ‘கர்ப்பத்தின் போது ஏற்பட்ட உடல் எடையுடன் கடுமையாக போராடியதாகவும் பேசி இருக்கிறார். அந்த பேட்டி தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் பேசும் போது, ‘ குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகதான் இந்த போட்டோஷூட் நடந்தது. உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் நான் எப்படி இருந்தேனோ, அப்படியே என்னை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு சிரமமாக இருந்தது. போட்டோஷூட்டின் போது, எனக்கு இடுப்பு வலி இருந்தது.

தூக்கமின்மை 

கூடவே, தூக்கமின்மையும் என்னை எல்லாவற்றில் இருந்து திசை திருப்பி இருந்தது. நான் தாயாகி இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய உடல் முற்றிலுமாக வேறு மாதிரியாக தெரிகிறது. என்னுடைய பார்வை முற்றிலும் வேறு கண்ணோட்டத்திற்கு மாறியிருக்கிறது. இந்த புகைப்படங்களை நான் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். என்னை நான் அதிகமாக கஷ்டப்படுத்திவிட்டேனோ என்று நினைத்து வருந்துகிறேன். ஆனால், இந்த மாற்றங்களில் என்னால், அழகை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த புகைப்படங்களை நான் எப்போதுமே கொண்டாடுவேன் என்று எனக்குத் தெரியும் என்று பேசினார்.

ராதிகா ஆப்தே கர்ப்பம்

தான் கர்ப்பம் ஆனதை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்த ராதிகா ஆப்தே, லண்டனில் நடந்த BFI லண்டன் திரைப்பட விழாவில், சிவப்பு கம்பள விரிப்பில் அதனை முதன்முறையாக வெளிப்படுத்தினார். கடந்த வாரம் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். 

அந்தப்புகைப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் முன்னால் லேப்டாப் இருந்தது. இது தொடர்பான பதிவில், ‘பிறந்து ஒரு வாரம் ஆன என்னுடைய குழந்தை என்னுடைய மார்பில் இருக்கிறது. நான் வேலையை பார்க்க தொடங்கிவிட்டேன்’ என்று பேசினார்.

ராதிகா ஆப்தே பிரிட்டிஷ் வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தங்களுடைய உறவை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்தது. கடந்த 2011ம் ஆண்டு ராதிகா கற்றுக்கொள்வதற்கு சென்ற போது காதல் மலந்தது. அதிகாரப்பூர்வமான திருமண விழா கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்தது

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி