Cook With Comali: மணிமேகலைக்கு முதிர்ச்சி இல்லை... இப்படி கிழிப்பதற்கு இவர் தான் பொறுப்பு... ப்ரொடியூசர் பதில்
Sep 21, 2024, 12:50 PM IST
Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையே நடைபெற்று வரும் சண்டைக்கு காரணம் மணிமேகலை முதிர்ச்சி இல்லாமல் பேசியது தான் என்றும் பிரியங்கா மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு மணிமேகலை பொறுப்பேற்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் மணிமேகலை- பிரியங்கா இடையே ஏற்பட்ட சண்டை சோசியல் மீடியா வழியே வெடித்து பூதாகரமானது. இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பேட்டி ஒன்றில் இவர்களது சண்டை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மணிமேகலைக்கு தைரியம் இல்லை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் பங்கேற்க போவதில்லை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் தொகுப்பாளர் ஒருவர் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் குக்காக வந்தவர் என்பதை மறந்துவிட்டு அடிக்கடி தொகுப்பாளராகி என்னுடைய வேலையை செய்யவிடாமல் தடுக்கிறார் என பதிவிட்டுள்ளார். இவர் இப்படி பதிவிட்டது பிரியங்காவைத் தான் என்பது தெளிவாகவே அனைவருக்கும் தெரிகிறது. இந்த பதிவில் முன்னாள் ஆன்கர் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தி பேசியிருக்கிறார். பிரியங்காவைத்தான் இப்படி சொல்கிறார் எனத் தெரிகிறது. இருந்தாலும் அதை ஏன் தைரியமாக சொல்லவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா தான் இப்படி செய்தார். இவரால் தான் வெளியேறினேன் என அவருடைய பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால், ஒரு தமிழ் பெண்ணிற்கு இப்படி நேர்ந்ததா என கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அங்கு என்ன நடந்தது என்றே யாருக்கும் தெரியாது. அனைவரும் அவர்களுடைய கருத்துகளை மட்டுமே சொல்கிறார்கள். யாரும் நேரடியான தகவல்களை கூறுவதில்லை என்றார்.
பிரியங்காவின் கேரக்டர் கேள்விக்குறியாகியுள்ளது
பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜூவை ஜெயிப்பேன் எனக் கூறி விளையாடி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இங்கு பேச வேண்டியது விளையாட்டை பற்றித் தான். அவருடைய கேரக்டர் பற்றி அல்ல. ஆனால், மணிமேகலை, பிரியங்காவின் கேரக்டரையே அழித்து விட்டார். நியாயமாக பேசும் தமிழ் பெண்ணாக இருந்தால், சுய மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் பெண்ணாக இருந்தால் சோசியல் மீடியாவில் உலாவும் ஒரு தரமற்ற ஆடியோ போலியானது. இதற்கும் எங்கள் சண்டைக்கும் காரணமில்லைன்னு சொல்லி இருக்கலாம் அல்லவா. இங்கு எல்லா துறையிலும் சுயமரியாதை இல்லாமல் வேலை செய்து கொண்டு தான் உள்ளனர்.
இங்கு பிரச்சனை தேஷ்பாண்டே தான்
பிரியங்கா என்ற பெண் அவருடைய ஷோக்களில் நவரசத்தையும் காட்டியுள்ளார். ஆனால், அவர் தன்னை பல இடங்களில் தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்துள்ளார். இங்கு பிரச்சனை என்பது தேஷ்பாண்டே என்ற பெயர் தான். பிரியங்கா இதுவரை என்ன செய்தார் என கூறுபவர்கள் அனைவரும் நேரடியாக பேசியிருக்க வேண்டும். இன்டர்வியூக்களில் மணிமேகலையை தமிழ் பொண்ணு என கூறுகிறார்கள். பிரியங்கா யார் என்று பிரியங்காவின் குடும்பத்திற்கு தெரியும். பிரியங்காவிற்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு தெரியும். மணிமேகலை இந்த சூழ்நிலையை முதிர்ச்சி இல்லாமல் கையாண்டு பேசியுள்ளார். மணிமேகலையின் குடும்பத்தை பற்றி இங்கு யாரும் பேசவே இல்லை. மணிமேகலையின் முன் வாழ்க்கை பற்றி யாரும் இங்கு பேசவில்லை. ஆனால், பிரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கை இங்கு பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
டாமினன்ட்-ன்னா என்ன?
மணிமேகலை அவரோட அசாத்திய திறமையால தான் முன்னேறி வந்திருக்கார். ஆனால், ஒரு சேனலில் இருந்து மற்ற சேனலுக்கு மாறாமல் வருடக் கணக்காக ஒரே சேனலில் பணியாற்றும் பெண்ணுக்கு திமிரு இருக்கக்கூடாதா. பொது ஊடகத்துல பிரச்சனையை பேசி காசு சம்பாதிச்சுட்டு இருக்கிங்க. இங்கு பலரும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி அவரை கொச்சைப் படுத்துவதற்கு மணிமேகலை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்