தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் மறைவு

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் மறைவு

Aarthi V HT Tamil

Jul 14, 2022, 07:18 PM IST

google News
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா இன்று காலமானார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா இன்று காலமானார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா இன்று காலமானார்.

1970 ஆம் ஆண்டு வெளியான எங்க மாமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஐசரி வேலன். இவர், எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் அதிமுக ஆட்சி தொடங்கிய புதிதில், துணை அமைச்சராக பதவியில் இருந்தார்.

இவரது மகன் ஐசரி கணேஷ் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பல்கலைக்கழக துணைவேந்தர் என பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் மூக்குத்தி அம்மன், குட்டி ஸ்டோரி, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் ஐசரி வேலனின் மனைவியும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா (75) இன்று (ஜூலை 14 ) வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.

அவரின் இறுதிச் சடங்கு நாளை (ஜூலை 15 ) காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது.

புஷ்பாவின் மறைவு முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி