தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadivelu Vs Vijayakanth: வீதி வீதியாய் விஜய்காந்தை கிழித்த அழுக்கு அரசியல்.. மன்னிப்புக்கேட்டாரா வடிவேலு? - பிரேமலதா!

Vadivelu vs Vijayakanth: வீதி வீதியாய் விஜய்காந்தை கிழித்த அழுக்கு அரசியல்.. மன்னிப்புக்கேட்டாரா வடிவேலு? - பிரேமலதா!

Sep 01, 2023, 06:00 AM IST

google News
பிரசாரத்தில் விஜய்காந்தை தாக்கி பேசியதற்காக வடிவேல் மன்னிப்புக்கேட்டாரா? என்பது குறித்து பிரேமலதா விஜய்காந்த் பேசி இருக்கிறார்.
பிரசாரத்தில் விஜய்காந்தை தாக்கி பேசியதற்காக வடிவேல் மன்னிப்புக்கேட்டாரா? என்பது குறித்து பிரேமலதா விஜய்காந்த் பேசி இருக்கிறார்.

பிரசாரத்தில் விஜய்காந்தை தாக்கி பேசியதற்காக வடிவேல் மன்னிப்புக்கேட்டாரா? என்பது குறித்து பிரேமலதா விஜய்காந்த் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “எங்களுடைய சொத்தை விற்று தான் கட்சியை ஆரம்பித்தோம். இப்போது எங்கள் கையில் அது இருந்தால் எத்தனையோ கோடி பெறும். 

சொத்தை விற்றுதான் அவ்வளோ பெரிய மாநாட்டை நடத்தினோம். விஜய்காந்த் அரசியலுக்கு வந்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். அதனால் நாங்கள் 100 கோடி ரூபாய் வரை இழந்து இருக்கிறோம். 

அவரும் சரி நானும் சரி அதற்காக இன்று வரை நாங்கள் அஞ்சவில்லை. அதை அவர் மிகவும் பார்த்து பார்த்து கட்டினார் அதை போய் இடித்து விட்டார்கள். அவ்வளவு குறுகிய கால இடைவெளியில் அது இடிக்கப்பட்ட போது அவருக்கு அது மிகப்பெரிய வலி தந்தது. அதற்காக நாங்கள் எந்த இடத்திலும் பின்வாங்கவில்லை; பின் வாங்கப் போவதுமில்லை.

அவருக்கு எப்போதுமே அப்படியான தைரியம் உண்டு. எல்லா விஷயத்திலும் அவர் முன் வந்து நின்று பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறார். அதில் நடிகர் சங்கமும் அடக்கம்.

வடிவேலு விஜயகாந்தை அவ்வளவு பேசினார். அதற்காக அவர் விஜயகாந்த்திடம் வந்து மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி ஒன்று பரவி வருகிறது. அந்த செய்தியில் உண்மையில்லை. 

வடிவேலு விஜயகாந்தை சந்திக்கவில்லை. இதுவரை தன்னை திட்டியவர்களையோ, தன்னை அவமதித்தவர்களையோ விஜயகாந்த் எந்த இடத்திலாவது சுட்டிக்காட்டி இருக்கிறாரா? சொன்னதில்லை. அதுதான் ஒரு தலைவனுக்கான பண்பு. ஆகையால் இங்கு யாரையுமே விஜயகாந்துடன் ஒப்பிட முடியாது.

விஜயகாந்தை எப்படி எல்லாம் இந்த சோசியல் மீடியாவில் மீம்களாக போட்டார்கள். அதைப்பற்றி விஜயகாந்த் ஒரு சின்ன மன வருத்தத்தை கூட எங்களிடம் பகிர்ந்ததில்லை. வடிவேலு அவ்வளவு பேசினார் என்று எல்லோரும் சொல்கிறார்கள்; நான் விஜயகாந்த் அருகில் தான் அப்போது அமர்ந்திருந்தேன். 

அப்போது விஜயகாந்த், வடிவேலு ஏன் இப்போது நடிக்க வில்லை அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும். அவர் பிறவி கலைஞன். என்று என்னிடம் அவர் சொன்னார். எல்லா தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும். அவரைப் போன்ற ஒருவரை இந்த தமிழ் சினிமா இழந்து விடக்கூடாது என்றார்” என்று பேசினார்

நன்றி: கலாட்டா!

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி