Pooja ramachandran announce pregnancy:கர்ப்பம் ஆனதை ரொமாண்டிக்காக அறிவித்த பூஜா
Nov 13, 2022, 01:38 AM IST
கர்ப்பமாகியிருப்பதை கணவர் ஜான் கொக்கனுடன் ரெமாண்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்து, அறிவித்துள்ளார் நடிகை பூஜா.
தமிழில் கதாநாயகியின் தோழியாகவும், கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்தவர் பூஜா ராமச்சந்திரன். எஸ்எஸ் மியூசில் சேனலில் தொகுப்பாளராக இருந்த இவரை எஸ்எஸ் மியூசிக் பூஜாவாகத்தான் பலருக்கு தெரியும்.
இவரும், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கேனும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மணமுறிவுக்கு பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்கள் அவ்வப்போது விடியோக்களை, புகைப்படங்களை, ரொமாண்டிக் போஸ்ட்களை பகிர்ந்து லைக்குகளை குவித்து வந்த இந்த தம்பதியினர், தற்போது தாங்கள் பெற்றோராக இருப்பதை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவர் ஜான் கொக்கேனுக்கு லிப் கிஸ் கொடுத்து அவருடன் நெருக்கமாக இருக்கும் சில ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு, பகிர்ந்துள்ளார்.
பூஜா தனது பதிவில், "ஒரு காதல் கதையின் சூறாவளி காற்று, அழியாத ஆத்மாக்கள், இதயம் நிறைந்த சிரிப்புகள், பைத்தியக்காரதனமான சண்டைகள், முடிவில்லா உரையாடல்கள், காமம், காதல், சாகசம் என என்ன ஒரு அழகான வாழ்க்கை பயணம் இருவரும் இணைந்து மேற்கொண்டோம்.
எங்கள் வாழ்கையில் குட்டி அதிசயம் விரைவில் வர இருக்கிறது என்பதை தெரிவிப்பதில் உற்சாகம் அடைகிறோம்" என்று காதல் சொட்ட குறிப்பிட்டுள்ளார்.
ஜான் கொக்கன் தற்போது அஜித்குமாரின் துணிவு படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
டாபிக்ஸ்