தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ponniyin Selvan Is Set To Become The First Tamil Movie To Release In Imax

Ponniyin Selvan: ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் !

Karthikeyan S HT Tamil

Aug 16, 2022, 08:23 PM IST

'பொன்னியின் செல்வன் பாகம் 1' ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'பொன்னியின் செல்வன் பாகம் 1' ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பொன்னியின் செல்வன் பாகம் 1' ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுத் திட்டமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kubera Nagarjuna: 'குபேரா' மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கும் நாகார்ஜூனா.. தரமான ஃபர்ஸ்ட் லுக்.. ரட்சகனை மறக்க முடியுமா?

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா

வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும், 'பொன்னி நதி பாக்கணுமே' என்ற பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.