V.A. Durai: சிகிச்சைக்கு பணமில்லை… தவிக்கும் பிதாமகன் தயாரிப்பாளர்
Mar 06, 2023, 12:49 PM IST
தயாரிப்பாளர் வி.ஏ.துரை மருந்து வாங்கக்கூட காசில்லாமல் தவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறார்.
இவரது சில படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து உள்ளார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரை வாழ்க்கை சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.
அவரை பார்த்துக்க ஆள் யாரும் இல்லாமல், காலில் ஆறாத ரணத்துடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நனறாக இருக்கும் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுளளார்.
அந்த வீடியோ பதிவில், “ நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது.
என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறேன். மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். அதனால் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் “ என்றார். இவரின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவரின் சூழ்நிலையை அறிந்த சூர்யா உடனே மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்து உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்