தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Peranbu Serial : வானதி மாயம்; அதிர்ச்சியில் ராஜேஸ்வரி; அடுத்து என்ன?

Peranbu Serial : வானதி மாயம்; அதிர்ச்சியில் ராஜேஸ்வரி; அடுத்து என்ன?

Priyadarshini R HT Tamil

Apr 11, 2023, 01:13 PM IST

google News
Serial Update : காணாமல் போகும் வானதி... ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி, நடக்க போவது என்ன? பேரன்பு சீரியல் அப்டேட். இந்த வாரம் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்று தெரியுமா?
Serial Update : காணாமல் போகும் வானதி... ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி, நடக்க போவது என்ன? பேரன்பு சீரியல் அப்டேட். இந்த வாரம் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்று தெரியுமா?

Serial Update : காணாமல் போகும் வானதி... ராஜேஸ்வரிக்கு அதிர்ச்சி, நடக்க போவது என்ன? பேரன்பு சீரியல் அப்டேட். இந்த வாரம் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்று தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு.

இந்த சீரியலில் கடந்த வாரம் கிருஷ்ணவேணி மகள் தான் வானதி என சாமிப்பிள்ளைக்கு உண்மைகள் தெரிந்த நிலையில் தற்போதைய நிலையில் இந்த விஷயம் தெரிய வந்தால் வானதியின் வாழ்க்கைக்கு ஆபத்து என மறைத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் இந்த சீரியலில் நடக்கபோவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, பௌர்ணமி பூஜைக்கு வானதி வர வேண்டும் என கிருஷ்ணவேணி நினைவுப்படுத்த போன் செய்ய வானதி பதில் ஏதும் சொல்லாமல் கட் செய்து விடுகிறாள்.

அடுத்து கிருஷ்ணவேணி தான் குழந்தை பொருட்களை வைத்திருக்கும் ரூமில் தீ பற்றி எரிய அங்கு போன கிருஷ்ணவேணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இதனால் வானதி அவளை பார்க்க வர ஆர்த்தி ராஜ ராஜேஸ்வரியிடம் இந்த விஷயத்தை போட்டு கொடுக்கிறாள். பிறகு இனி கிருஷ்ணவேணியை சந்திக்க வேண்டாம் என சொல்லும் ராஜேஸ்வரி வாசனிடம் வானதி தன்னை விட்டு போய்விடுவாளோ என பயமாக இருப்பதாக சொல்லி அழுகிறாள்.

ராஜராஜேஸ்வரியை மீறி வானதி கோயிலுக்கு வர அவள் காணாமல் போகிறாள்‌. இதனால் ராஜேஸ்வரி குடும்பம் அதிர்ச்சி அடைகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே பேரன்பு சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி