தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹீரோயிசமற்ற காதல்.. 20 வருடங்கள் கடந்த பின்னும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் 7ஜி ரெயின்போ காலனி!

ஹீரோயிசமற்ற காதல்.. 20 வருடங்கள் கடந்த பின்னும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் 7ஜி ரெயின்போ காலனி!

Oct 15, 2024, 10:37 PM IST

google News
காதல் ஒருவனை அப்படி என்னதான் செய்யும் எனக் கேட்டவர்களுக்கு பதில் கூறும் படமாக வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இன்றளவும் அனைவரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
காதல் ஒருவனை அப்படி என்னதான் செய்யும் எனக் கேட்டவர்களுக்கு பதில் கூறும் படமாக வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இன்றளவும் அனைவரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

காதல் ஒருவனை அப்படி என்னதான் செய்யும் எனக் கேட்டவர்களுக்கு பதில் கூறும் படமாக வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இன்றளவும் அனைவரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மிடில் கிளாஸ் வாழ்க்கை, நண்பர்களோடு ஊர் சுற்றுவதே லட்சியம், தெண்டச்சோறு என அப்பாவிடம் 20 வயதிற்கு பின்னும் திட்டும் அடியும் வாங்கும் இளைஞன் வாழ்வில் ஒரு பெண் வந்தால் அவன் என்னவாக மாறுவான் என்பதே 7ஜி ரெயின்போ காலனியின் கதை.

ஹீரோயிசம் இல்லாத ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதை ரவிகிருஷ்ணா தனது நடிப்பின் மூலம் வாழ்ந்து காட்டியிருப்பார். தன்னை சுற்றி சுற்றி வரும் இளைஞனை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல், ஏற்றுக் கொண்டபின் அவனை வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்கும் பெண்ணாக அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார் சோனியா அகர்வால்.

செல்வராகவன்

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற வித்தியாசமான ஒரு காதல் கதையை திரைப்படமாக எடுத்து தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர், தனது தம்பி மற்றும் மனைவியை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை எடுத்திருப்பார்.

 முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கதையால் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த அவர், இரண்டாவது படமாக உருவாக்கியது தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்திருந்தாலும் அப்படத்திற்கான ரசிகர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்தப் படத்தை, இப்போதுள்ள இளைஞர்களும் ரசிக்கும் படியாக எவர்கிரீனாக இயக்கி இருப்பார் செல்வராகவன்.

எதார்த்தை பிரதிபலிக்கும் கதை

நடத்தர குடும்பத்தில் பிறந்து, தந்தை எதிர்பார்த்த அளவிற்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத, வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு போகும் இளைஞர் கதிர். இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடிவருகிறது அனிதாவின் குடும்பம்.

கதிர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அனிதாவின் தம்பி கேட்கிறார். அதற்கு கதிரும் அவரது நண்பர்களும் மறுக்க அந்த சிறுவன் கிரிக்கெட் விளையாட்டில் தன்னையும் சேர்த்தக்கொள்ள சிபாரிசு செய்யுமாறு அனிதாவை விட்டு கேட்கிறான்.

இதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாததால், சிறுவர்களை அழைகத்துக் கொண்டு அனிதா கிரிக்கெட் விளையாடுகிறார். இதைக் கண்ட கதிரின் நண்பர்கள் அவரை திட்டுகின்றனர். இதையடுத்து, கதிரின் வீட்டிற்கு வரும் அனிதாவை வெறிக்க வெறிக்க பார்த்து அச்சமூட்டுகிறான் கதிர்.

இது இப்படியே சென்றுகொண்டிருக்க, குடியிருப்பில் நடக்கும் விழா ஒன்றில் கதிர் அவர்களது நண்பர்கள் கூட்டத்துடன் செய்யும் சேட்டையைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறார் அனிதா.

எதிர்பாராமல் வரும் காதல்

இதற்கிடையில், கதிருக்கு அனிதா மீது காதல் வர அவரை பின்தொடர்கிறார். ஆனால், அனிதா பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவர் கண்களுக்கு கதிர் தவறானவனாகவே தெரியும் கதிரை திட்டி, செருப்பால் அடித்து காயப்படுத்திய பின், காதல் முளைக்கிறது அனிதாவிற்கு.

அனிதாவால் முன்னேற்றமடையும் கதிர்

குடும்ப சூழல், சாதி, இனம், கலாச்சாரம் இத்தனையும் கடந்த இவர்களது காதல் நகர்கிறது. அப்போது, தனது காதலன் தென்டச் சோறு என இனியும் திட்டு வாங்கக்கூடாது என எண்ணி அவரது திறமையை கண்டறிந்து வாழ்வில் முன்னேற்றமடைய வைக்கிறார்.

அதுமட்டுமின்றி, இத்தனை நாள் திட்டிவந்த அப்பாவின் பாசத்தையும் புரிய வைக்கிறார். அதற்குள்ளாக இவர்களின் காதல் அனிதா வீட்டிற்கு தெரியவர எல்லாம் தலைகீழாகர மாறியது.

கண்முன்னே நிகழும் காதலி மரணம்

தோழியின் திருமணம் என பொய் சொல்லி வீட்டை விட்டு வெளியேறும் அனிதா, கதிரை சந்தித்த சமயத்தில் விபத்தில் சிக்கி அனிதா உயிரிழக்கிறார். இதையடுத்து, கதிர் என்ன செய்கிறான், எப்படி வாழ்கிறான், அவனது காதலை மறந்தானா, காதலியோடு சேர்ந்து இறந்தானா என்பதை பேசியுள்ளது படம்.

சாதிமத பேதமற்ற காதல்

எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் ஒரு சாதாரண இளைஞனின் சாதி, மதம் , இனம், மொழி கடந்த காதல் அவனை எப்படியெல்லாம் மாற்றி இந்த உலகத்தை ரசிக்க வைத்துள்ளது. அதில் வாழ வைத்துள்ளது என்பதை மிக அழகாக கனக்கச்சிதமாக காட்டியிருப்பார் செல்வ ராகவன்.

யுவன் மேஜிக்

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவும் மனதை தொட்டுச் சென்று தான் செல்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தை பார்க்க வந்த மக்களின் மனதை கரைய வைத்தது.

பல மொழிகளில் ரிலீஸ்

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்ற இந்தப் படத்தின் கணத்தை புரிந்த சிலர், பல மொழிகளில் இப்படத்தை வெளியிட்டும், மறு உருவாக்கம் செய்தும் கொண்டாடினர்.

சமீபத்தில் இப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விரைவில் வெளியாகும் 2ம் பாகம்

இந்நிலையில், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், 20 ஆண்டுகள் ஆன சமயத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியிலும் இயக்குநர் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி