தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pathaan Movie To Be Release In Ott

Pathaan OTT: ஓடிடிக்கு வரும் பதான் திரைப்படம்

Aarthi V HT Tamil

Mar 16, 2023, 02:30 PM IST

பதான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பதான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

பதான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பாலிவுட்டின் முந்தைய சாதனைகளை முறியடித்தது. இந்தித் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக இது மாறி இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Kubera Nagarjuna: 'குபேரா' மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கும் நாகார்ஜூனா.. தரமான ஃபர்ஸ்ட் லுக்.. ரட்சகனை மறக்க முடியுமா?

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா

இந்நிலையில் பதான் திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் பதான் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் நூறு கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பாலிவுட் மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் ஷாருக்கான் பதான் என்ற ரா ஏஜெண்டாக நடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஒரு எதிரியால் தொடங்கப்பட்ட ரகசியப் பணியை பதான் எப்படி எதிர்கொண்டான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இதில் வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்திருந்தார்.

ஐம்பது நாட்களில் 1000 கோடி

பதான் படம் ஐம்பது நாட்களில் 1043 கோடி வசூல் செய்தது. இப்படம் இந்தியாவில் 650 கோடியும், வெளிநாடுகளில் 393 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதிக வசூல் செய்த பாலிவுட் படம் என்ற சாதனையை பதான் படைத்தது. கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடிக்கும் படம் இது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.