தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paiya 2: விரைவில் பையா 2… ஆனா…நடிகர், நடிகை மாற்றம்

Paiya 2: விரைவில் பையா 2… ஆனா…நடிகர், நடிகை மாற்றம்

Aarthi V HT Tamil

Feb 02, 2023, 11:35 AM IST

google News
பையா 2 படம் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பையா 2 படம் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பையா 2 படம் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது பையா. 2010 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். வசூல் ரீதியாவகும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 தமன்னா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் திரைப்படமாக இருந்தது. வழக்கமான திரைக்கதை என்றாலும் அதை மக்களின் ரசனைக்கேற்ப அழகாக சிம்பிளாக கொடுத்தது படத்தின் வெற்றியை மாற்றியதது. படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. 

ஹீரோவும், ஹீரோயினுமும் பெங்களுரிலிருந்து, மும்பைக்கு காரில் பயணம் செய்வதை மையமாக வைத்து திரைக்கதை எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் பையா 2 படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை பையா பட இ

இதுவரையில், பையா 2 படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா. ஜான்வி கபூர் எந்த அளவிற்கு பையா 2 படத்தில் பொருத்தமாக இருப்பார்கள் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி