தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paranjith: ‘நேரடி அரசியலில்தான்’; திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு;பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக நானா? - பா.ரஞ்சித்!

PaRanjith: ‘நேரடி அரசியலில்தான்’; திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு;பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக நானா? - பா.ரஞ்சித்!

Jul 19, 2024, 09:08 AM IST

google News
PaRanjith: இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. நான் என்னுடைய கேள்விகளை, என்னுடைய அறிக்கையின் வாயிலாக அரசிடம் வைத்தேன். அது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக நான் உணர்கிறேன். - பா.ரஞ்சித்!
PaRanjith: இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. நான் என்னுடைய கேள்விகளை, என்னுடைய அறிக்கையின் வாயிலாக அரசிடம் வைத்தேன். அது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக நான் உணர்கிறேன். - பா.ரஞ்சித்!

PaRanjith: இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. நான் என்னுடைய கேள்விகளை, என்னுடைய அறிக்கையின் வாயிலாக அரசிடம் வைத்தேன். அது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக நான் உணர்கிறேன். - பா.ரஞ்சித்!

PaRanjith: தனி இசைகலைஞரான பாடகர் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். 

தீர்வு கிடைத்து விடுமா? 

அப்போது அவர் பேசும் போது, “ ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக நாளை நான் பேரணி நடத்துகிறேன். அந்த ஒரு பேரணியால், தீர்வு வந்துவிடும் என்று நான் கூற முடியாது. ஆனால், தீர்வை நோக்கி நகர்வதற்கான உந்துதலை, ஒரு விழிப்புணர்வை அந்த பேரணி உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.  படுகொலை தொடர்பாக, சட்ட ரீதியாக, சரியாக விசாரணை நடத்தி, சரியான குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் எதன் பின்னணியில் இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்பதை மிகத் தீவிரமாக விசாரணை செய்து, அதனை சட்டபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

அந்த நிரூபனத்தின் அடிப்படையில், சட்டரீதியாக அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இந்த கொலை தொடர்பாக, எனக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை நான் ஏற்கனவே காவல்துறையிடம் விவரித்து விட்டேன். காவல்துறை உண்மையான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக கூறியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அவர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். 

அதிர்ச்சியாக இருக்கிறது 

இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. நான் என்னுடைய கேள்விகளை, என்னுடைய அறிக்கையின் வாயிலாக அரசிடம் வைத்தேன். அது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக நான் உணர்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக மாறுவதற்கு எனக்கு விருப்பம் கிடையாது. நான் ஏற்கனவே நேரடி அரசியலில் தான் இருக்கிறேன். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக நடந்திருக்கும் என்கவுண்டரை,  நான் ஆக்கபூர்வ விஷயமாக பார்க்கவில்லை.” என்றார். 

திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்த அன்று, சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறினார். முதல்வரை சந்தித்து விட்டு வந்த பின்னர், சி பி ஐசாரணை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இந்த முரண்பாடு குறித்து உங்களது கருத்து என்ன? 

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் வைத்தோம். ஆனால், தற்போது காவல்துறை தன்னுடைய விசாரணையை மிகவும் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது. அவர்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நிறுத்தும் போது, அதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில், மேற்கொண்டு நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். 

முந்தைய ஆட்சி காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, தலித் மக்களுக்கான தாக்குதலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். அவர்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், தற்போதும் தொடர்ந்து தலித் மக்கள் தாக்கப்படுவதும், தலித் மக்களின் பிரச்சினைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதும் விமர்சனத்திற்கு உட்பட்டது. 

இந்த ஆட்சியில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது அரசு அதிகாரிகளுக்கு அதிக அதிகார இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆகையால் சரியான ஆட்சி அதிகாரிகளுக்கு சரியான அதிகாரம் கொடுத்து, குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி