RAJINIKANTH: ‘சாவு வீட்டில் கூட ஓர வஞ்சனை.. கொஞ்சமாவது நன்றி வேண்டாமா?’ - ரஜினியை பொளந்த பிரபலம்!
Aug 24, 2024, 11:44 AM IST
RAJINIKANTH: ஸ்ரீதர் சார் படத்தில் கேமராமேன் அசிஸ்டெண்டாக இருந்த ஹமீத் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கம். அவர் இவ்வளவு நம்பி வந்த சினிமா, நம்மை கைவிட்டு விட்டது. ஆகையால் நாம் துபாய்க்கு சென்றுவிடலாம். அங்கு சென்று வேறு ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றார். - ரஜினியை பொளந்த பிரபலம்!
தயாரிப்பாளர் பாலாஜி மகன், பாலாஜி பிரபு ரஜினிகாந்த் பற்றி பெட்டர் டுடே சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய அப்பா பிரபல இயக்குநர் ஸ்ரீதர் உடன் பல வருடங்களாக இணை இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்துதான் அவர் வெளியே வந்து பட வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் அமைந்துவிடவில்லை.
ஸ்ரீதர் சார் படத்தில் கேமராமேன் அசிஸ்டெண்டாக இருந்த ஹமீத் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கம். அவர் இவ்வளவு நம்பி வந்த சினிமா, நம்மை கைவிட்டு விட்டது. ஆகையால் நாம் துபாய்க்கு சென்றுவிடலாம். அங்கு சென்று வேறு ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றார். இதையடுத்து அப்பாவுக்கும் அது சரி என்று பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஒவ்வொரு வருடமும், திருப்பதி ஏழுமலையானை சந்திப்பது அப்பாவின் வழக்கம். அந்த வகையில் அன்றைய ஆண்டும் அப்பா திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கினார்.
விரக்தியாக கும்பிட்டு விட்டு வந்தார்.
எவ்வளவோ கஷ்டப்பட்டு விட்டேன். வாய்ப்புகள் வரவில்லை. ஆகையால் சினிமாவை விட்டுச் செல்கிறேன் என்று விரக்தியாக கும்பிட்டு விட்டு வந்தார். அதனுடைய பிரசாதத்தை தயாரிப்பாளர் கலை ஞானத்திடம் கொடுத்தார். இதையடுத்து கலைஞானம் ஒரு அதிர்ச்சியான தகவலைச் அப்பாவிடம் சொன்னார். அது என்னவென்றால், நான் தயாரிக்க இருக்கும் படத்திற்கு நீ தான் இயக்குனர் என்று. காரணம் என்னவென்றால் பைரவி படத்தின் போது அப்பா, கலைஞானம் சாருடன் கதை திரைக்கதை வசனத்தில் உதவிகரமாக இருந்தார். அதனால் அப்பாவுக்கு பைரவி கதை நன்றாக தெரியும். அதனால் கலைஞானம் ஒரு நூறு ரூபாயை முன்பணமாக கொடுத்து. அவரை கமிட் செய்தார்.
அந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ரஜினியை கேட்கலாம் என்று கலைஞானம் சார் சொல்ல, என்னுடைய அப்பா அவரை நேரில் சந்தித்து கதையைச் சொன்னார். அப்போது ரஜினி சார் முழுக்க முழுக்க குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை யாருமே ஒரு கதாநாயகனாக போட்டு படம் எடுக்க தயாராகவே இல்லை.
சாவு வீட்டில் கூட ஓரவஞ்சனை
எந்த ஒரு இயக்குனரும் அப்படிப்பட்ட ஒரு தைரியமான முடிவை எடுக்கவே இல்லை. நடிகர் ரஜினிகாந்தை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த, பாலச்சந்தருக்கே அவரை ஹீரோவாக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் முதன்முறையாக ரஜினிகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது என்னுடைய அப்பா தான். ஆனால் அதனை அவர் எந்த ஒரு மேடையிலும் சொன்னதே இல்லை. அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு தெரியவே இல்லை.
அவர் அந்த விஷயத்தில் இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறார் எல்லா இடங்களிலும் எனக்கு பாலச்சந்தர் பிடிக்கும், முள்ளும் மலரும் மகேந்திரன் சார் பிடிக்கும் என்கிறார். ரஜினிகாந்த் முதன் முறையாக ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்திய பாஸ்கரை பற்றி பேச மறுக்கிறார். அதில் அவருக்கு என்ன அப்படி ஓரவஞ்சனை என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ ஒரு திட்டம் போட்டு தான் இப்படி செய்கிறார்கள்
இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்பா இறந்ததற்கு கூட அவர் வரவில்லை. வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் மேனேஜரை விட்டு இரங்கல் செய்தியை யாவது தெரிவித்திருக்கலாம். அதைக் கூட அவர் செய்யவில்லை ஆனால் அதற்கு அடுத்த நாள் ஒரு நடிகை ஒருவர் இறந்தார் அவரது இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்