Mythology Series: கலர்ஸ் தமிழ் டிவியில் சிவசக்தி திருவிளையாடல் - விறுவிறுப்பான ஆன்மிக புராண தொடர்
Jun 26, 2024, 10:16 AM IST
சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மிக புராண தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஆராவாரமாகவும் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் சுவாரஸ்யத்துடன் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மிகுந்த பொருட்செலவோடு தயாராகி, சுவாரஸ்யமான திரைக்கதையோடு ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து இந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
ஆன்மிக புராண தொடர்
சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில் திகிர் திருப்பங்கள், பாரதத்தின் ஆன்மிக புராணச் செய்திகள் அனைத்தும் சேர்த்து விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூட்டும் விதமாக அமைந்துள்ளது. கண்களை ஆச்சர்யத்தில் பளபளப்பாக்கும் செட் அமைப்புகள், நேர்த்தியான கதாப்பாத்திரத் தேர்வுகள், மாயாஜாலம் நிகழ்த்தும் சிஜி வேலைப்பாடுகள் போன்றவை கைலாயத்தையும், வானுலகையும் நேரில் காண்பதுபோல், ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.
கதைச்சுருக்கம்
சிவன் – ஆதிபராசக்தி இருவரும் இணைந்த ஆனந்த தாண்டவத்தில் அண்டசராசரங்களும், அனைத்து உயிர்களும் உருவாகின்றன. எல்லாவற்றுக்குள்ளும் ஆதி ஊற்றாக சிவன் இருக்கிறார். பிறகொரு காலத்தில் பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி.
சிவன் தனியனாகிறார். போதாதற்கு நாராயணின் தீவிரப் பக்தன் பிரஜாபதி தட்சண், சிவனை எதிரியாகப் பார்க்கிறார். ஆனால், தட்சண் மகள் தாட்சாயிணியோ பருவ வயது எட்டியதும் சிவன் மீது காதல் கொள்கிறாள். "மணந்தால் மகாதேவன். இல்லையேல் கன்னிக்கோலம்" என்கிறாள். "மயானத்தில் சாம்பல் பூசித் திரியும் அகோரி சிவன், எனக்கு மருமகன் ஆவாதா? நான் மகாராஜன்; சிவன் மயானபதி. அவன் என் மகளை மணக்க முடியாது. எனக்கு மருமகனும் ஆக முடியாது" என தட்சன் கடுமையாக எதிர்க்கிறார்.
சிவன் மீதான விரோத்தத்தை இன்னும் ஆழமாக வளர்க்கிறார். ஆனால், பிரபஞ்ச கணக்கு வேறு. சிவனும் ஆதிபராசக்தியின் மனித அவதாரமான தாட்சாயிணியும் இணைவதே படைப்பு நியதி என மும்மூர்த்திகளான பிரம்மன், நாராயணன் உள்பட அனைத்து சக்திகளும் விரும்புகின்றன.
சிவன் – தாட்சாயிணி இருவரின் காதலை பிரிக்க சுயம்வரம் ஏற்பாடு செய்கிறார் தட்சண். நிபந்தனையோடு ஒப்புக்கொள்கிறாள் தாட்சாயிணி. இறுதியில் சிவனை மணாளனாகத் தேர்ந்தெடுக்கிறாள் தாட்சாயிணி. அவமானத்தில் தவிக்கிறார் தட்சண். மனசுக்கேத்த மணாளனாக மகேஸ்வரனே கிடைத்ததில் மகிழ்கிறாள் தாட்சாயிணி.
இந்த வார தொடர்
சிவசக்தி திருவிளையாடல் தொடரின் இந்த வாரம் இறுதியில், மூவுலகும் கொண்டாடும் சிவன் - தாட்சாயிணி திருமணம் அரங்கேறுகிறது. பிரம்மன் முன்னின்று திருமணத்தை நடத்திவைக்க, நாராயணன் சாட்சியாகிறார்.
கோலகலமாக நடந்தேறிய திருமணத்தால் மூவுலகும் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இல்வாழ்க்கையில் இணைகின்றனர் பிரபஞ்சத்தின் ஆதார சக்திகளான சிவனும் ஆதிப்பராசக்தியும். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழப்போகிறது.
இதன் மூலம் பூமியில் சக்திப் பீடங்கள் உருவாக போகின்றன. வீரபத்திரர் வழிப்பாடு தோன்ற போகிறது. பார்வதி தேவியாக அவதரித்து சிவனை நோக்கி தவமிருந்து அவரை மணக்கப்போகிறாள் ஆதிபராசக்தி.
இதற்கிடையில் அசுரர் – தேவர் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம், தங்களுக்குக் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற கோபத்தில் தேவர்களோடு மோதப்போகிறார்கள் அசுரர்கள். இவையெல்லாம் ஆதி – அந்தமில்லா சிவனின் திருவிளையாடல்களே.
இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திகீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணத் தவறாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.