"ஐயோ.. அவங்க சொல்றது எதுவும் உண்மையில்ல.. நான் காத்திட்டு இருக்குறது இதுக்காகத் தான்" ராஷ்மிகா ஓபன் டாக்
Nov 30, 2024, 10:48 AM IST
என்னைப் பற்றி வெளிவரும் செய்திகள் எல்லாம் உண்மையில்லை என நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் என்ற தகவல் சில நாட்களாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து அவர் புஷ்பா 2: தி ரூல் படத்தில் நடித்தது தான்.
டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹீரோ அல்லு அர்ஜூனுக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இது தான் இந்தியாவில் சினிமா நடிகருக்கு கொடுக்கப்பட்ட அதிக சம்பளம்.
இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த்தும், விஜய்யும் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளமாக பார்க்கப்பட்டது. இந்த சாதனையை அல்லு அர்ஜூன் முறியடித்ததால், நிச்சயம், இப்படத்தின் ஹீரோயினுக்கும் அதிக சம்பளம் கிடைத்திருக்கும் என்ற புரளிகள் வெளியே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ராஷ்மிகா சம்பளம்
அவர்கள் கூறும் தகவலின் படி பார்த்தால், புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவின் சம்பளம் குறித்து, அவரே பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) 2024-ன் நிறைவு விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் புஷ்பா 2 படத்திற்காக நீங்கள் அதிக சம்பளம் வாங்கியதால், இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
ராஷ்மிகாவின் காத்திருப்பு
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, "எனக்கு இதுபோன்று வரும் வதந்திகளின் மீது சிறிதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால் அது உண்மையல்ல" என்று புன்னகையுடன் கூறினார்.
எனக்கு புஷ்பா 2 படத்திற்காக ரூ. 2 கோடி மட்டுமே சம்பளம் கிடைத்தது எனவும் அவர் கூறினார். புஷ்பா-2 படத்துக்கு தேசிய விருது கிடைக்குமா என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "விருது வரும் என நம்புகிறேன்" என்று பதிலளித்தார்.
பான் இந்தியா ஹீரோயின்
ராஷ்மிகா மந்தனா, கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா 1 திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பின், அவர், தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தி படங்களிலும் நடிக்க கமிட் ஆனார். இதன் பின் இவரது சம்பளம் கடந்த மூன்று ஆண்டுகளில், 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனியுடன் குபேரா படத்திலும், விக்கி கௌஷலுடன் சாவா படத்திலும் சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவின் காதல்
சென்னையில் புஷ்பா 2 படக்குழுவினர் 'வைல்ட் ஃபயர்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய ராஷ்மிகா, என்னுடைய வாழ்க்கை புஷ்பா திரைப்படத்திற்கு சமம் என்று சொல்வேன். அல்லு அர்ஜூன் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர்.” என்று பேசினார்.
என்னுடைய காதலன், கொஞ்சம் கோபக்காரகாகவும் இருக்க வேண்டும், அன்பாளராக இருக்க வேண்டும் என்றார். அவர் பணக்காரராகவோ, பெரிய அளவில் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மனது மட்டும் பிடித்து இருந்தால் போதும் என்றார்.
மேலும் பேசிய அவர், நான் கல்யாணம் செய்து கொள்ளும் நபர் குறித்து எல்லோருக்கும் தெரியும். புஷ்பா 2 திரைப்படம் வந்த உடன் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்” என்று பேசினார்.
12,000 திரையரங்குகளில் வெளியாகும் புஷ்பா
புஷ்பா 2 உலகம் முழுவதும் 12,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அல்லு அர்ஜுன் படம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாவதால் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்