தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “என்னால எதுவும் பண்ண முடியாதா? .. ஜெயிச்சு காட்டுறேன்..” - நெகட்டிவிட்டுக்கு நெப்போலியன் மகன் தனுஷ் பதிலடி!

“என்னால எதுவும் பண்ண முடியாதா? .. ஜெயிச்சு காட்டுறேன்..” - நெகட்டிவிட்டுக்கு நெப்போலியன் மகன் தனுஷ் பதிலடி!

Nov 10, 2024, 12:28 PM IST

google News
என்னுடைய கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் பலரும் இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பலர் பாசிட்டிவாக மெசெஜ் அனுப்பிய அதே நேரத்தில், சிலர் நெகட்டிவாகவும் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். - நெப்போலியன் மகன் தனுஷ்
என்னுடைய கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் பலரும் இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பலர் பாசிட்டிவாக மெசெஜ் அனுப்பிய அதே நேரத்தில், சிலர் நெகட்டிவாகவும் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். - நெப்போலியன் மகன் தனுஷ்

என்னுடைய கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் பலரும் இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பலர் பாசிட்டிவாக மெசெஜ் அனுப்பிய அதே நேரத்தில், சிலர் நெகட்டிவாகவும் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். - நெப்போலியன் மகன் தனுஷ்

பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக இந்தத்திருமணத்தில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா சரத்குமார், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தத்திருமணத்திற்கு தனுஷூக்கு பலர் வாழ்த்து தெரிவித்த போது, ஒன்றுமே செய்ய முடியாத ஒருவருக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறீர்களே என்று விமர்சனம் செய்து வருகிறனர். இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: -

அதில் அவர் பேசும் போது, “என்னுடைய கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் பலரும் இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பலர் பாசிட்டிவாக மெசெஜ் அனுப்பிய அதே நேரத்தில், சிலர் நெகட்டிவாகவும் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள்.

 

 

ஜெயித்துக்காட்ட வேண்டும்

ஆனால் அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருந்தது. அது என்னை மேம்படுத்திக்கொள்ள, நான் ஜெயிக்க உத்வேகம் தரக்கூடியதாக இருந்தது. ஆகையால் நான் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன். ஆகையால் நான் சாதித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன். 

என்னைப்போல இருக்கும் பல பேரை இவனால், பண்ண முடியும், பண்ண முடியாது என்று கூறி கிண்டல் அடிப்பார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். எதை வேண்டுமென்றாலும் நீங்கள் சாதிக்க முடியும்.” இவ்வாறு அவர் அதில் பேசி இருக்கிறார்.

முன்னதாக, இந்த திருமணம் குறித்து நெப்போலியனும் அவரது மனைவியும் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர்

அந்த பேட்டியில் அவர்கள் பேசியதாவது,

 “தனுசுக்கு ஜப்பான் நகரின் டோக்கியோவிற்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். இதற்கிடையில் அவனுக்கு பெண் கிடைத்து விட்டதாக தகவல் கிடைத்தது. இரண்டும் ஒரே நேரத்தில் வருகிறதே என்று எண்ணி. தனுஷிடம் தற்போதைக்கு இந்த டோக்கியோ நகரின் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, கல்யாண வேலைகளை கவனிக்கலாமா என்று கேட்டோம்.

அதற்கு தனுஷ் நான் இந்த ட்ரிப்புக்காக கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காத்திருந்திருக்கிறேன். ஆகையால், எனக்கு இந்த ட்ரிப்பும் முக்கியம், கல்யாணமும் முக்கியம். ஆகையால், இந்த கல்யாணத்தை ஜப்பான் நகரின் டோக்கியோவில் நடத்தலாமே என்று கூறினான். அவனின் முடிவுப்படியே நாங்கள் ஜப்பானில் கல்யாணத்தை நடத்த முடிவு செய்தோம்.

எங்களுடைய மருமகள் அக்ஷயாவை நாங்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது. முதலில் என்னுடைய மாமனார் தரப்பிலிருந்துதான் இப்படி ஒரு பெண் இருக்கிறது. அந்த பெண்ணிற்கு தனுசைப்பற்றித் தெரியும். எல்லாம் தெரிந்துதான் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறினார்.

ஆனால், எனக்கு அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. இதையடுத்து என்னுடைய அண்ணனை நேரடியாக சென்று அக்ஷயா குடும்பத்தை பார்க்க வைத்தேன். அவர் ஓகே சொன்ன பின்னர், நானும் என்னுடைய மனைவியும் நேரடியாக சென்று அக்ஷயாவிடம் பேசினோம். அப்போது நீ விரும்பி தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்கிறாய்; உன்னை யாராவது இந்த கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்களா? உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைத்தோம்.

தனுஷின் வீடியோக்கள்

ஆனால் அவள் நான் தனுஷின் வீடியோக்கள் பலவற்றைப் பார்த்து இருக்கிறேன். தனுஷ் எனக்கு பிடிக்கும்; அதனால்தான் நான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக பேசினார். இன்னொன்று என்னுடைய மாமனார் அந்த பெண்ணை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அவளது முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். அவளிடம் ஒரு கனிவு இருந்தது. எல்லாவற்றையும் விட அவள் மிக மிக பொறுமைசாலி; இந்த குணங்கள் எல்லாம் அக்‌ஷயாதான் தனுஷிற்கு கனகச்சிதமாக இருப்பார் என்று எங்களை முடிவு செய்ய வைத்தது

எனக்கு கல்யாணமான பின்னர், என்னுடைய மனைவியை நான் செல்லும் எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் அழைத்துச் சென்று விடுவேன். அதனால் என்னுடன் அவளும் நிறைய ட்ராவல் செய்ய வேண்டிய நிலைமை உருவானது. இதனாலேயே பலமுறை அவருக்கு கருச்சிதைவு நடந்தது. இதை எடுத்து மருத்துவர் அவரை ட்ராவல் செய்ய வேண்டாம் என்று கூற, அதன்படியே செய்தோம். அதன் பின்னர் பல வருடங்கள் காத்திருந்து ஐந்தாவது வருடத்தில் பிறந்தவன்தான் தனுஷ். அதனால் அவன் எங்களுக்கு மிக மிக ஸ்பெஷலான குழந்தை” என்று பேசினர்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி