Sanjay Dutt: விஜயுடன் மோதும் கே.ஜி.எஃப் வில்லன்.. ட்விட்டரில் மாஸ் மெசெஜ்!
விஜயின் 67 ஆவது படத்தில் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பொங்கல் பரிசாக வெளியான திரைப்படம் ‘வாரிசு’. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் மூலமாக விஜயுடன் பணியாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்கிக்கொண்டார் இசையமைப்பாளர் தமன். கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவே செய்திருந்தது. குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. தற்போதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படத்தின் வசூல் 300 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டு இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று லோகேஷ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணியாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டு, படக்குழுவின் இதர விபரங்களும் இணைக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து இன்று காலை படக்குழுவினர் காஷ்மீருக்கு தனிவிமானத்தில் பறந்தனர்.
இந்த நிலையில் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இருப்பதும் உறுதியாகியிருக்கிறது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் அவர், 'தளபதி 67' ஒன்லைன் கேட்டதுமே இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துவிட்டேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்