Myskkin: ‘மகிழ்ச்சியான தருணம்..’ பாவனாவுடன் அந்தரங்க உறவில் இருந்த மிஷ்கின்
Sep 15, 2023, 01:20 PM IST
இயக்குநர் மிஷ்கின் நடிகை பாவனாவுடன் ரகசிய உறவில் இருந்ததை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன் பிறகு ஜெயம் ரவியுடன் தீபாவளி படத்தில் நடித்தார்.
தொடர்ந்து மலையாளம், தமிழ் , கன்னடம் மற்றும் பிற மொழி படங்களில் நடித்தார் . இதற்கிடையில் பிப்ரவரி 17 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது, திடீரென காரில் கடத்திச் செல்லப்பட்டு , அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது. இவருக்காக தமிழ் சினிமாவின் பலரும் ஆதரவாக நின்றனர்.
பின்னர் அவரை கடத்தியவர்களில் ஒருவர் சிக்கிய நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த தீலிப் தான் கடத்த சொன்னதாகக் கூறினார். இவர் தான் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர். அவர்களுக்கு விவகாரத்து நடந்த பிறகு தீலிப், காவியா மாதவனைத் திருமணம் செய்தார்.
காவியா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் இவர்களின் காதல் நடந்த நிலையில் அதைப் பாவனா சென்று தோழியிடம் சொல்லி உள்ளார். அதனால் தான் தீலிப் அவரை ப்ளான் செய்து கடத்தி உள்ளார்.
இதனால் நடிகை பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு முறை விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் என்ன என கேட்டார்.
அப்போது பேசிய அவர், “பாவனாவுடனான எனது நெருங்கிய உறவு தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவருடன் அந்தரங்க உறவில் இருந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது” இந்த பதில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அவரது பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தியது.
முன்னதாக காரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய பாவனா, ”என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இருந்தும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.
2020 ஆம் ஆண்டு 15 நாட்கள் நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்து என் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க 7 வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகள் எல்லாத்திற்கும் பதில் கூறினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது” என என்றார்.
டாபிக்ஸ்