தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Myna Nandhini: நீ ஷோக்கு லாயக்கு இல்ல - மைனாவை பிக் பாஸ் வீட்டில் திட்டிய கணவர்

Myna Nandhini: நீ ஷோக்கு லாயக்கு இல்ல - மைனாவை பிக் பாஸ் வீட்டில் திட்டிய கணவர்

Aarthi V HT Tamil

Dec 27, 2022, 03:47 PM IST

google News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79 ஆவது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79 ஆவது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79 ஆவது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சீசனின் போதும் ப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் இன்று முதல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று ( டிசம்பர் 27) பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79 ஆவது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் மைனா நந்தினியின் கணவர் யோகி அவரிடம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அதில், ”இந்த பிக் பாஸ் ஷோவிற்கு நீ லாயக்கு இல்லை. ஷோவில் நீ இருக்க உனக்கு தகுதியே இல்ல. அப்படி தான் நீ விளையாடிட்டு இருக்க. நான் சொல்வதை நீ தப்புனு நிரூபிச்சு காட்டு. ஒரு தப்பு நடக்கும் போது அத தட்டிக் கேட்கனும்.

நீ கேட்க யோசிக்கிற, நம்மள எதாச்சும் பேசு வாங்களோ என ஒரு பயம் இருக்கு. கேம் விளையாடும் போது நீ உன் 100 சதவீதத்தை கொடு. அப்போது தான் மக்களுக்கு நீ நல்லா விளையாடுறனு ஒரு எண்ணம் வரும்” என கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக அமுதவாணன் வென்றார். நாமினேஷன் பட்டியலில் ரக்‌ஷிதா தவிற விக்ரமன், ஷிவின், ஏடிகே, கதிரவன், மைனா நந்தினி, அமுதவாணன், மணிகண்டன், அசீம், அமுதவாணன் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக ஜி.பி.முத்து விலகி வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி எலிமினேட் செய்யப்பட்ட வெளியே செல்லப்பட்டனர். கடந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்றார் என்ற அடிப்படையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரின் எலிமினேஷன் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி