தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mayangukiral Oru Maadhu: 48 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'மயங்குகிறாள் ஒரு மாது'

Mayangukiral Oru Maadhu: 48 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'மயங்குகிறாள் ஒரு மாது'

Karthikeyan S HT Tamil

May 30, 2023, 05:15 AM IST

google News
48 Years of Mayangukiral Oru Maadhu: முத்துராமன் - சுஜாதா நடிப்பில் வெளியான 'மயங்குகிறாள் ஒரு மாது' திரைப்படம் ரலீஸாகி இன்றோடு (மே 30) 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.
48 Years of Mayangukiral Oru Maadhu: முத்துராமன் - சுஜாதா நடிப்பில் வெளியான 'மயங்குகிறாள் ஒரு மாது' திரைப்படம் ரலீஸாகி இன்றோடு (மே 30) 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.

48 Years of Mayangukiral Oru Maadhu: முத்துராமன் - சுஜாதா நடிப்பில் வெளியான 'மயங்குகிறாள் ஒரு மாது' திரைப்படம் ரலீஸாகி இன்றோடு (மே 30) 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.

தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. 

அந்தவகையில், 1975 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மயங்குகிறாள் ஒரு மாது'. இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா, விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை, படாபட் ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம், காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பஞ்சு அருணாசலம் எழுதிய கதைக்கு எஸ்.பி.முத்துராமன் திரைவடிவம் கொடுத்திருந்தார். கண்ணதாசனும் பஞ்சு அருணாசலமும் பாடல்களை எழுதியிருந்தனர். படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்டு. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ், வாணிஜயராம் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தார்கள். எழுபதுகளில் புதுமாதிரியான இசையைத் தந்த விஜயபாஸ்கர்தான் இசையமைப்பாளர். படத்தை கலகலப்பாகவும் அதேசமயம் விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருப்பார் எஸ்.பி. முத்துராமன்.

முதலில் பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அடுக்கி வைத்துக்கொண்டு கிளை மாக்ஸ் காட்சியில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பது போல் மாற்றிக் கொடுத்தார். 

தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநியோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறியிருந்தார்.

படத்தில் சம்சாரம் என்பது வீணை என்ற பாடலை எழுதியிருந்த கவிஞர் கண்ணதாசன் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக்கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண்முன்னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தியாசமான படமாக எடுத்துவிட்டீர்கள் என்று முத்துராமனையும் பஞ்சுவையும் பாராட்டி னார்.

தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனக்கான ஒரு இடத்தை விட்டுச்சென்ற 'மயங்குகிறாள் ஒரு மாது' திரைப்படம் 1975 ஆம் ஆண்டு இதே மே 30 ஆம் நாளில் வெளியாகியது. காலங்கள் உருண்டோடி இன்றோடு 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. காலங்கள் கடந்திருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட காவியம் 'மயங்குகிறாள் ஒரு மாது'.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி