தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்த வாரம் எத்தனை படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் எத்தனை படங்கள் ரிலீஸ்

Aarthi V HT Tamil

Apr 18, 2022, 08:15 PM IST

google News
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படம் குறித்து இந்த பதிவில் காணலாம் .
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படம் குறித்து இந்த பதிவில் காணலாம் .

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படம் குறித்து இந்த பதிவில் காணலாம் .

திரையரங்குகளில் சமீபத்தில்  ’ பீஸ்ட் ’  , ’ ஆர் . ஆர் . ஆர் ‘ , ’ கே . ஜி . எஃப் 2 ‘ என பெரிய படங்கள் வெளியானது . இதனால் ஒரு சில வாரங்களுக்கு புது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்ள் குறித்து இதில் பார்ப்போம் . 

ஓ மை டாக்

சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் , ' ஓ மை டாக் ' . இப்படத்தில் அருண் விஜய்யுடன் , அர்னவ் விஜய் , விஜயகுமார் , மஹிமா நம்பியார் , வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர் . இதில் அருண் விஜய், அர்னவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர் .

அருண் விஜய் மகன் அர்னவுக்கும் , அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது . தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது .

ஆனந்தம்

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் , 'அனந்தம்' . பிரகாஷ் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த படத்தில் ரவிந்த் சுந்தர் , விவேக் பிரசன்னா , சம்பத் , ஜான் விஜய் , வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர் . இப்படம் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது .

அந்தாக்ஷரி

மலையாளத்தில் சோனி எல்ஐவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் , ’ அந்தாக்ஷரி ‘ . இந்த படம் சோனி ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது .

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி