48 Years of Idhayakkani: தூக்கலான கவர்ச்சியுடன் பக்கா எம்ஜிஆர் பார்மூலா - உலக அளவில் புகழ் பெற்ற இதயக்கனி
Aug 22, 2023, 05:45 AM IST
திமுகவில் இருந்த பிரிந்த பின்னர் வந்த எம்ஜிஆரின் இதயக்கனி அவரது படங்களில் இடம்பெறும் மாஸ் மசாலா அம்சங்களுடன் கொஞ்சம், த்ரில்லர், கொஞ்சம் அரிசியல் நெடியும் சேர்க்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களுக்கான சக்சஸ்புஃல் பார்மூலா வகுத்தவர்களின் முன்னோடி எம்ஜிஆர் என்பது திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் பார்முலா என்றே அழைக்கப்படும் இதில் பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், இறுதியில் ரசிகர்கள் என அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாகவே அமைந்திருக்கும்.
அந்த வகையில் திமுக கட்சியில் இருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு உருவாகி, அவரை ஆட்சிகட்டிலில் அமர வைப்பதற்கான விதை போட்ட படங்களில் ஒன்றாக இதயக்கனி படம் அமைந்திருந்தது. ஆர்எம் வீரப்பன் திரைக்கதை எழுத ஜெகநாதன் இயக்கியிருந்தார்.
வழக்கமாக எம்ஜிஆர் படங்களில் காமெடி, காதல், சென்டிமெண்ட், அதிரடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்துடனான எம்ஜிஆர் மோதல், சண்டைகாட்சி ரசிகர்களை குஷிப்படுத்தும். ஆனால் இதயக்கனி படத்தில் சர்ப்ரைஸ் விஷயமாக எம்ஜிஆருக்கு வில்லன் இல்லாமல், வில்லி கதாபாத்திரம் இடம்பிடித்திருக்கும். அத்துடன் கொஞ்சம் த்ரில்லர் பாணியிலும் படம், சில பல டுவிஸ்ட்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடத்தை சுவாரஸ்யமான காட்சிகளாக வைத்திருப்பார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் காதல் காட்சிகளும் எம்ஜிஆர் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும். அதன்படி இதயக்கனி படத்திலும் அதற்கு விதி விலக்கு வைக்காமல் காதலுடன் கவர்ச்சியிலும் ஒரு படி மேலே சென்றிருப்பார்கள்.
இந்த படம் வெளியாகும் முன் வரை ஜோடி போட்ட நடிகைகளுக்கு பதிலாக புதுமுகமாக பாலிவுட் சினிமாவின் சில்க் ஸ்மிதாவாக அழைக்கப்பட்ட ராதா சலூஜாவை ஜோடியாக நடிக்க வைத்தார்கள். அவரும் பாலிவுட் சினிமா பாணியில் தமிழிலும் கவர்ச்சிக்கு எந்த குறையும் வைக்காமல் விருந்து படைத்தார்.
இந்த படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.
திமுகவில் இருந்தபோது அதன் கொள்கைகளை தனது படங்களின் மூலம் பரப்பி வந்த எம்ஜிஆர், அங்கிருந்து பிரிந்த பின்னர் தனக்கான கொள்களை தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில் இந்த படத்திலும் அரசியல் நொடி கொண்ட வசனங்கள், காட்சிகளை படத்தின் திரைக்கதையின் போக்கில் இடம்பெறும்.
இந்த படம் தொடங்கும் முன்னரே, அறிஞர் அண்ணாவின் ஓவியம், அண்ணாவின் குரல் அதன் பின்னரே டைட்டில் என அண்ணா திராவிட முன்னேற்றம் கட்சிகளான உரமாக இருந்தது இந்த படம்.
இதுபோததென்று எம்ஜிஆர் இண்ட்ரோ பாடலாக நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற பாடலை ஒலிக்க செய்து ரசிகர்களை இதயத்தை எம்ஜிஆரை புகுத்தியிருப்பார்கள். இன்று வரையிலும் அதிமுக விழாக்களில் ஒலிக்கும் பிரதான பாடலாக இருந்து வருகிறது.
எம்எஸ் விஸ்நாதன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. இன்பமே உந்தன் பேர் என்ற பாடலில் இடம்பெறும் கேமரா ஆங்களிகளும், டான்ஸ் மூவமெண்ட்களும் கவர்சிக்கான புது இலக்கணமே படைத்தது எனலாம். இந்த பாடல் இப்படி என்றால் தொட்ட இடமெல்லாம் என்ற மற்றொரு பாடலில் பாலிவுட் சில்க் என்ற பெயருக்கு ஏற்ப வேற லெவலில் கவர்ச்சியில் கிறங்கடித்திருப்பார். கூடவே வெண்ணிற ஆடை நிர்மாலவும் தன் பங்குக்கு கவர்ச்சி விருந்து படைத்திருப்பார்.
இந்த படத்தில் மற்றொரு ஹலோ லவர் மிஸ்டர் ரைட் என்று உஷா உதுப் பாடிய ஆங்கில பாடல் ஒன்றும் இடம்பிடித்திருக்கும். எம்ஜிஆருக்கு சூப்பர் ஹிட் படமாகவும், அவரை அரியணை ஏற்றியதில் முக்கிய பங்காற்றிய படமாகவும் இருந்து வரும் இதயக்கனி வெளியாகி இன்றுடன் 48 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்