MGR : MGR மனத்தை மாற்றிய சாதாரண பிஞ்ச செருப்பு.. எம்.ஜி.ஆர்-க்கே வாழ்நாள் பாடம் நடத்திய மூத்த நடிகர்
Sep 15, 2024, 06:20 PM IST
MGR : எம்ஜிஆர், என்.எஸ்.கேவிடம் அண்ணே செருப்பு அறுந்துடுச்சு. கடைக்கு போய் புது செருப்பு வாங்கிட்டு வருமோமா என்று கேட்டுள்ளார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் நைட்டு ஆகிவிட்டது. காலையில் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.
MGR : எம்ஜிஆர் என்ற மனிதரையும் தமிழகத்தையும் பிரித்தே பார்க்க இயலாத வகையில் தன் முத்திரையை பதித்தார். அந்த மாமனிதர் மறைந்து இத்தனை காலத்திற்கு பிறகும் தமிழகத்தையும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தையும் பிரித்தே பார்க்க முடியாத பந்தம் இன்றும் தொடர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகின் தன் காலத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இருந்த மார்க்கெட்டுக்கு அவர் நினைத்திருந்தால் இன்னும் ஏராளமான படங்களில் நடித்து சொத்துக்களை குவித்து இருக்கலாம். ஆனால், படத்தின் எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தியதோடு, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டதால்தான் 136 படங்களுக்கு மேல் அவரால் நடிக்க முடியவில்லை. இப்படி எம்ஜிஆர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் ஒன்று தான் மாயா மச்சிந்திரா .
மாயா மச்சிந்திரா இந்த படத்தை ராஜா சந்திர சேகரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.கே.ராதா, எம்ஜிராமச்சந்திரன், எம்.ஜி சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், ஏ.டி மதுரம் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவம் எம்ஜிஆர் வாழ்நாள் முழுவதும் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதை தடுத்து நிறுத்தியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த சுவாரஸ்மான சம்பவம் குறித்து சினிமா செய்திதொடர்பாளரும், பத்திரிகையாளருமான வி.கே.சுந்தர் தனது யூடியூப் சேனல் தெரிவித்துள்ளார். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
அறுந்த செருப்பு
மாயாமச்சிந்திரா படத்திற்கான படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்தது. அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் , எம்ஜிஆர் உள்ளிட்ட சிலர் ஊரை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது ஒரு ஆற்றை கடக்க முயன்றனர். எம்ஜிஆர் வேகமாக தாவி ஆற்றை கடந்தார். அப்போது எம்ஜிஆரின் செருப்பு அறுந்து போய் விட்டது. உடனே எம்ஜிஆர் என்.எஸ்.கேவிடம் அண்ணே செருப்பு அறுந்துடுச்சு. கடைக்கு போய் புது செருப்பு வாங்கிட்டு வருமோமா என்று கேட்டுள்ளார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் நைட்டு ஆகிவிட்டது. காலையில் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.
என்.எஸ்.கிருஷ்ணன் செஞ்ச சம்பவம்
பின்னர் காலையில் எம்ஜிஆர் வந்து என்.எஸ்.கிருஷ்ணனிடம் அண்னே கடைக்கு போய் செருப்பு எடுத்துட்டு வந்துடுவோமா என்று கேட்டவுடன் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பார்சலை எடுத்து எம்ஜிஆர் கையில் கொடுத்தார். அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அறுந்து போன செருப்பை காலையிலேயே கடைக்கு எடுத்து போய் என்.எஸ்.கிருஷ்ணன் தைத்து கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதை பார்த்த எம்ஜிஆர் ஏன்னே நாம வேற புது செருப்பு வாங்கிருக்கலாமே என்று கேட்டார்.
அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் உங்க அம்மா உன்னையும், உன் அண்ணனையும் சினிமாவிற்கு அனுப்பியது பணம் சம்பாதிப்பதற்குதான். நீ பணம் இருக்கு என்பதற்காக தேவைக்கு அதிகமான பொருளை வாங்க கூடாது. இந்த செருப்ப பாரு இன்னும் ஆறு மாசத்துக்கு உழைக்கும். நீ ஏன் தேவையில்லாம தூக்கி போட்டுட்டு வேறு ஒரு செருப்பு வாங்கணும் என்று நினைக்குற என்று சொன்னவுடன் எம்ஜிஆர் நெகிழ்ந்து போய் அந்த செருப்பையே போட்டு கொண்டார். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு எம்ஜிஆர் தன் வாழ்நாள் முழுவதும் அநாவசியமான பொருட்களை வாங்குவது இல்லை. எந்த பொருளை வாங்கினாலும் அதை கடைசி வரை பயன்படுத்தும் வழக்கத்தையும் வைத்திருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சினிமா குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
டாபிக்ஸ்