தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள் ..எம்ஜிஆரின் ‘காவல்காரன்’ வெளியாகி 56 ஆண்டுகள் நிறைவு!

கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள் ..எம்ஜிஆரின் ‘காவல்காரன்’ வெளியாகி 56 ஆண்டுகள் நிறைவு!

Karthikeyan S HT Tamil

Sep 07, 2023, 05:15 AM IST

google News
56 Years Of Kavalkaran: எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'காவல்காரன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 56 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
56 Years Of Kavalkaran: எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'காவல்காரன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 56 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

56 Years Of Kavalkaran: எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'காவல்காரன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 56 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு.

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ல் வெளியான திரைப்படம் 'காவல்காரன்'.

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடிக்க ஒரு முக்கிய காரணம் உண்டு.

ஆம், எம்ஜிஆர் சுடப்பட்ட பின்னர் நடித்து 8 மாதங்கள் கழித்து ‘காவல்காரன்’ ரிலீஸானது. துக்கமும் அழுகையுமாக வந்து மக்கள் படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.

எம்ஜிஆர் போலீஸ் அதிகாரியாக தோன்றியிருந்தார். நம்பியார் வில்லன் கதாபாத்திரம், அவரின் மகள் ஜெயலலிதா. ஒரு பங்களாவில் நடக்கும் கொலை குறித்து துப்பறிய எம்ஜிஆர், நம்பியார் வீட்டு கார் டிரைவராக வருவார். அவர் போலீஸ் என்பது அம்மாவுக்கு கூட தெரியாது. கொலை செய்தது யார், நம்பியார், அசோகன், மனோகரின் வேலைகள் என்னென்ன என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார் என்கிறதுதான் கதை. அதை முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஃபார்முலா கதையாகத்தான் கையாண்டு அசத்தினார் இயக்குனர் ப.நீலகண்டன்.

'மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ', 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது', 'அடங்கொப்புரானே தியமா நான் காவல்காரன்', 'காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்' போன்ற எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.

திரையில் ஜொலித்த 'காவல்காரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது 1967ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இதே நாளில் இந்தப் படம் ரிலீஸாகியது. கிட்டத்தட்ட, 56 வருடங்களாகிவிட்டன. ஆனால்,நேற்று ரிலீஸானது போல் உள்ளது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி