TAMIL SERIAL ACTRESS: தமிழ் சீரியல்களின் பாசிடிவ் எனர்ஜி.. ஹீரோயின்களின் நிழல் குரலாக ஒலிக்கும் தீபா வெங்கட்
Aug 24, 2024, 08:55 AM IST
Tamil Serial Actress Deepa venkat: தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் பாசிடிவ் பெண்ணாகவே தோன்றி பாசிடிவ் எனர்ஜி ஆக வலம் வந்தவர் தீபா வெங்கட். டப்பிங் கலைஞராக இருந்து வரும் அவர் ஏராளமான ஹீரோயின்களின் நிழல் குரலாக ஒலிக்கும் நபராக திகழ்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக பின்னர் பல டிவி சீரியல்களில் தோன்ற பக்கத்து வீட்டு பெண் போலாவும், டப்பிங் கலைஞராக பல்வேறு ஹீரோயின்களின் குரலாக வெள்ளித்திரையும் ஒலித்தும் கொண்டிருப்பவர் தீபா வெங்கட்.
குழந்தை நட்சத்திரமாக பாசமலர்கள் படத்தில் தோன்றிய இவர், பின்னர் 1996இல் சன்டிவியில் ஒளிபரப்பான இப்படிக்கு தென்றல் என்ற சீரியல் மூலம் டிவி நடிகையாக உருவெடுத்தார். அதன் பிறகு சுமார் பல்வேறு சேனல்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது டப்பிங்கில் அதிகம் செலுத்தி வரும் தீபா வெங்கட், பலரது மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாகவும் திகழ்ந்துள்ளார்.
பாசமலர்கள் படத்தில் நடிப்பதற்கு முன்னர் தீபா வெங்கட் முதல் பயணம் டப்பிங்கிலேயே தொடங்கிவிட்டது. பள்ளி படிக்கும்போதே டப்பிங் ஆடிஷனில் இந்தி கார்ட்டூன் சேனலுக்கு சென்னையில் இருந்தவாறே டப்பிங் பேசிவந்துள்ளார். இந்த டப்பிங் பணிகளில் பிரபமாகி சினிமா வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
சீரியல் பயணம்
தீபா வெங்கட் நடித்த முதல் சீரியலான இப்படிக்கு தென்றல் தொடரில் அவரது கதாபாத்திரும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் பிறகு அடுத்தடுத்து பல சீரியல்களில் தனது அற்புதமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார்.
சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சித்தி சீரியலில், விஜி என்ற கேரக்டரில் யுவராணியின் தங்கையாக தோன்றியிருப்பார். அக்கா வில்லியாகி இருந்தாலும் தங்கையாக விஜி என்ற கேரக்டரில் மிகவும் பாசிட்டிவான பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தார். இதைத்தொடர்ந்து கோபுரம், அண்ணாமலை, கோலங்கள் தொடர்களில் நடித்தார்.
கோலங்கள் சீரியலிலும் தேவையானியின் தோழியாக, வில்லன் ஆதித்யாவின் மனைவியாக முக்கித்துவமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். காமெடி தொடரான ரமணி vs ரமணி என்கிற சீரியலில் ஹூயூமரில் பட்டையை கிளப்பியிருப்பார்.
சீரியல்கள் என்றாலே சண்டை சச்சரவுகள் என அதிகமாக இருக்கின்ற போதிலும், இதுவரை தான் நடித்திருக்கும் பெரும்பாலான சீரியல்களில் பாசிடிவான கேரக்டர்களிலேயே தோன்றியிருக்கிறார்.
தவிர சன்டிவியில் கஸ்தூரி, அல்லி ராஜ்ஜியம், ஜெயா டிவியில் ரோஜா, அக்னி பிரவேசம், ராஜ் டிவியில் கீதாஞ்சலி, சாரதா, கலைஞர் டிவி மைதிலி போன்ற புகழ் பெற்ற டிவி சீரியல்கள் தனது நடிப்பால் முத்திரை பதித்தார். பிரபல தனியார் எஃப் சேனலில் ஆர்ஜேவாகவும் இருந்துள்ளார். தமிழக அரசு கலைமாமணி விருதை பெற்ற டப்பிங் கலைஞராக உள்ளார்.
ஹீரோயின்கள் குரலாக ஒலிக்கும் தீபா வெங்கட்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த சிம்ரன், ஜோதிகா, சிநேகா, அனுஷ்கா, நயன்தாரா தொடங்கி சமீபத்தில் வெளியான பொன்னியன் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் வரை ஏராளமான ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி, நிழல் குரலாக ஒலித்து வருகிறார்.
எங்க குடும்பத்தில் யாருமே சினிமாவுல இல்லை. நானும் இதுவரைக்கும் வாய்ப்புத் தேடியது கிடையாது. தேடி வரும் வாய்ப்புகளில் பணிபுரிகிறேன். கணவர் ஐடியில் வேலை செய்கிறார். ரெண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அப்பு படத்தில் தேவையானிக்கு குரல் கொடுத்தது தான் ஹீரோயினுக்காக முதன்முதலாக டப்பிங் பேசியது. ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கேன். ஆனாலும், 'ராஜா ராணி'யில் நயன்தாராவுக்குப் பேசினது பெரிய ரீச். அவருக்காக பல படங்களில் டப்பிங் பேசியுள்ளேன்.
மயக்கம் என்ன படத்தில் ரிச்சா கர்ப்பம் கலைஞ்சு அழும் காட்சியில் டப்பிங் பேசுறப்போ, நானும் அஞ்சு மாசக் கர்ப்பமாக இருந்தேன். அப்போது அந்த காட்சியில் நிஜமாவே எமோஷனலாகி டப்பிங் பேசினேன்.
சின்ன வயசுல வீட்டுல ஸ்லோகம், கிளாசிக்கல், கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். அதில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஸ்வரமும் சரியா இருக்க, முறையான உச்சரிப்பு வர்ற வரைக்கும் பாட வேண்டும். அந்தப் பழக்கம் தான் சினிமாவில் பேசும்போது தெளிவாக தமிழை உச்சரிக்கை உதவுகிறது. தவிர பாலச்சந்தர் சார் சீரியல்களில் நடிக்கிறப்போ, லைவ் டயலாக் ரெக்கார்டிங் இருக்கும். அதனால், டயலாக்கை தெளிவாகப் பேசி பழக்கமாச்சு.
வதந்தியால் மன வருத்தம்
தீபா இறந்துவிட்டதாக ஒருமுறை பொய்யான செய்தி வந்தது. இது தன்னை மிகவும் கவலையடையச் செய்தது என்று பேட்டி ஒன்றில் தீபா கூறினார். அவர் அளித்த பேட்டியில். “நான் இறந்துவிட்டதாக சில யூடியூப் சேனல்கள் செய்தி வெளியிட்டன. தாங்க முடியாமல் இருந்தது. இரண்டு பெண்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் புகைப்படத்துடன் எனது மரணச் செய்தி வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பிறகு எனக்கு வராத அழைப்புகள் இல்லை. கோவிட் காலத்தில் இந்த செய்தி வந்தது. என் குடும்பம் சீரழிந்தது. தெரிந்த பலரும் பதற்றத்துடன் கூப்பிட்டனர். இப்படி செய்தி கொடுப்பதால் அவர்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை.
சொந்தக் குடும்பத்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு இந்தச் செய்தியைக் கொடுப்பவர்களின் நிலை என்ன? யாராவது வந்து உங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கிறதா? பாவம் என் அம்மா. உண்மை தெரியாமல் பலர் இந்த செய்திகளை பகிர்வது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதால் அவர்களுக்கு என்ன பணம் அல்லது நேர்மறையான கருத்துகள் கிடைக்கும்? என்ன நடந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்தி கொடுப்பது பெரிய தவறு.
இந்தச் செய்தி எனது குடும்பத்தை மிகவும் பாதித்தது. அதனால் தான் எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்கவில்லை. நேர்மையே இல்லை. நான் என்னவென்று என் குடும்பத்தினருக்குத் தெரியும். வேறு யாரையும் சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றார்.
சினிமாவில் பிரபலமானதை காட்டிலும் சீரியல்கள் தனது எதார்த்த நடிப்பாலும், ஹீரோயின்களுக்கு தனது அற்புத டப்பிங் பேச்சாலும் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்துள்ளார் தீபா வெங்கட்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/