தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்

Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்

Aarthi V HT Tamil

Oct 22, 2022, 12:52 PM IST

google News
நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை மீராம் மிதுன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஆல்பம் பாடல்கள் வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது என வாடிக்கையாக செய்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார்

அது மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

 இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில், மீரா மிதுன் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

மீரா மிதுன் தனது செல்போன்  எண்னை அனைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்  மீரா மிதுன் தாயார் ஷியாமலா நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில், ”கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் எங்களுடன் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி