Master Producer: ‘அமரர் ஊர்தி’ வாகனம் என கிண்டல்; கையில் கசங்கிய 700 ரூ..- பிரிட்டோ கடந்த கரடு பாதை - மனைவி பேட்டி!
Aug 21, 2023, 08:09 AM IST
மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சேவியர் பிரிட்டோ மனைவி விமலா ராணி பேசியிருக்கிறார்.
“எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள் நிறைய பணம் இருந்தால் தான் ரிச் என்று. உண்மையில் ரிச் என்பதன் அர்த்தம் அதிகமான பணம் வைத்திருப்பது அல்ல. நீங்கள் எப்படியாக உங்களை வடிவமைத்து இருக்கிறீர்கள் என்பது பற்றியது.
உண்மையில் எந்த ஒரு இடத்திலும் விடா முயற்சியை கைவிடாமல் இருத்தல், மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தான் என்னை பொருத்தவரை ரிச்சனஸ். அதை எங்கள் வீட்டில் நன்றாகவே சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள்.
உண்மையில் என்னுடைய கணவரான பிரிட்டோ ஆரம்ப கட்டத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் எல்லா நாளுமே நமக்கு சவால் தான். முதன்முறையாக என்னுடைய கணவர் பிசினஸ் செய்துவிட்டு அதற்கான பேமெண்ட் வாங்க செல்லும் பொழுது அந்த பேமெண்ட் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அப்போது எல்லாரும் நீ நன்றாக படித்திருக்கிறாய், உனக்கு ஏன் இந்த கஷ்டமான வேலை.. படித்த படிப்புக்கு நீட் வேலை செய்யலாமே என்று சொன்னார்கள்.
நான் கல்யாணமான புதிதில் அவர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் அதற்காக அவர் வாங்கிய சம்பளம் 700 ரூபாய். அதில் 200 ரூபாயை அவர் வைத்துக் கொண்டு மீதமுள்ள 500 ரூபாயை வீட்டுச் செலவுக்கு தருவார்.
அப்போதெல்லாம் எங்களிடம் ஒரு வாகனம் இருக்கும் அதனை அமரர் ஊர்தி என்று சொல்வார்கள். அதில் அவர் செல்லும் போது உங்களுக்கு வேறு வண்டியே இல்லையா என்று சொல்லி இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நீங்கள் மேலே வர வேண்டும் என்றால் நிறைய நிராகரிப்புகளை பார்த்திருக்க வேண்டும், நிறைய ஏமாற்றங்களை பார்த்திருக்க வேண்டும். எல்லாம் தாண்டி, அந்த இடத்தில் உங்களுக்கு ஒரு தைரியம் வர வேண்டும்.
நான் இந்த இடத்தில் இருக்கிறேன். நான் எனக்கு விரும்பியதை செய்கிறேன். நிச்சயமாக நான் எதிர்பார்த்த இடத்தை அடைவேன் என்ற ரீதியான எண்ணங்கள் நமக்கு மட்டுமல்லாமல் நமது குடும்பத்திற்குள்ளும் எழ வேண்டும்.” என்று பேசினார்
நன்றி: கலாட்டா!
டாபிக்ஸ்