தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பெரிய நடிகையாக இருந்தும் ஒரு காலத்தில் கெட்டுப்போன சாப்பாட்டை அள்ளி அள்ளி சாப்பிட்ட மனோரமா ஆச்சி!

பெரிய நடிகையாக இருந்தும் ஒரு காலத்தில் கெட்டுப்போன சாப்பாட்டை அள்ளி அள்ளி சாப்பிட்ட மனோரமா ஆச்சி!

Oct 11, 2024, 06:00 AM IST

google News
எவ்வளவு பெரிய லெஜண்ட் ஆச்சி.. கெட்டுப்போன அந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடிச்சா கூட பரவாயில்லை.. ஆனா அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க. அது அவர் சிறந்த நடிகைக்குரிய அடையாளம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பெரிய லெஜண்ட் ஆச்சி.. கெட்டுப்போன அந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடிச்சா கூட பரவாயில்லை.. ஆனா அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க. அது அவர் சிறந்த நடிகைக்குரிய அடையாளம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு பெரிய லெஜண்ட் ஆச்சி.. கெட்டுப்போன அந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடிச்சா கூட பரவாயில்லை.. ஆனா அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க. அது அவர் சிறந்த நடிகைக்குரிய அடையாளம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் சில நேரங்களில் காட்சிகளின் ரியாலிட்டிக்காகவும் பெர்பெக்சனுக்காகவும் அதிக மெனக்கெடல்கள் தேவை இருக்கும். சின்ன சின்ன காட்சிகள் கூட நுணுக்கமான முறையில் திரையில் வெளியாக சில நேரங்களில் நடிகர் நடிகைகளின் அர்ப்பணிப்பும், உழைப்பும் மிக முக்கியம். அப்படியான ஒரு முக்கிய சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம். ஆச்சி என்று எல்லோருக்கும் பரிட்சயமாகி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஆச்சி மனோரமா ஒரு படத்துக்காக கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட்ட சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம். மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் 1998 ல் வெளியான படம் மறுமலர்ச்சி. இந்த படத்தில் தேவயானி, மம்முட்டி, ஆச்சி மனோரமா, ரஞ்சித், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது V K Sundar Updates யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

ஜமீன் வீட்டில் படப்பிடிப்பு

அதில், மறுமலர்ச்சி திரைப்படம் திருவண்ணமாமலைக்கு பக்கத்தில் வேட்டவலம் ‌என்ற கிராமத்தில் ஜமீன் வீட்டில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு பல காட்சிகள் எடுக்கப்பட்டது. அதில் ஒரு காட்சியில் வீட்டில் மனோரமா இருக்கும் போது நடிகர் பாலா சிங் சாமியார் வேடம் போட்டு வருவார். பொதுவாக ராசுப்படையாச்சி வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு கொடுப்பது அந்த வீட்டின் பழக்கம் என்று காட்சி அமைப்பு இருக்கும். இந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மனோரமா ஆச்சி இலை போட்டு சாப்பாடு, காய்கறி, கூட்டு எல்லாம் வைப்பார். அப்போது ஆச்சி பார்க்காத நேரத்தில் பாலா சிங் அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து விடுவார்.

ஆச்சியிடம் இந்த வீட்டில் விஷம் வைத்த சாப்பாட்டை கொடுக்குறீங்க நான் சாப்பிட மாட்டேன் என்பார். இதனால் டென்ஷன் ஆகும் மனோரமா ஆச்சி யாரு வீட்டுல வந்து என்ன வார்த்தைடா சொல்ற.. ராசு படையாச்சி வீட்டுல விஷமா.. என்று சொல்லி அந்த சாப்பாட்டை பெரிய பெரிய கவளமாக சாப்பிடும் காட்சி.

இந்த பட பிடிப்பின் போது இயக்குநர் சாப்பாட ரெடி பண்ணி வைங்க.. அந்த சீன் எடுக்கலாம் என்று சொன்னதால் உதவி இயக்குநர்கள் மதியம் புரடொக்க்சனில் இருந்து வந்த மதிய உணவுக்கான சாப்பட்டை எடுத்து இலை எல்லாம் போட்டு ரெடி பண்ணி இருந்தனர். இடையில் வேற வேற காட்சிகள் எடுக்கப்பட்டதால் மாலை 7 மணிக்கு எடுக்க வேண்டிய காட்சி இரவு சுமார் 11 மணிகிட்ட ஆகி விட்டது. அப்போது உதவி இயக்குநர் போய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சாப்பாட்டின் மீது இருந்த இலையை எடுத்தார். அப்போது சாப்பாட்டின் மேல் மூடி வைக்கப்பட்டிருந்த இலையை திறந்த போது கெட்டுப்போய் வாடையடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உதவி இயக்குநர் பக்கத்தில் இருந்த வீட்டில் சாதம், உருளைக்கிழங்கு, மசால் எல்லாம் போட்டு கொஞ்சம் சாப்பாடு ரெடி பண்ணி தர முடியுமா என்று கேட்டுள்ளார். அவர்களும் சரி ஆச்சிக்கு தானே என்று பெருந்தன்மையோடு ரெடி பண்ணி தருகிறோம் எனறு சொல்லி விட்டனர்.

ஆச்சியின் காதுக்கு சென்ற விஷயம்

பின்னர் ஆச்சியிடம் சாதம் கெட்டு போய் விட்டது. வேறு ஒரு சாதம் ரெடி பண்ண சொல்லி இருக்கு.. நீங்க இந்த ஷாட்டில் இத சாப்பிட வேண்டாம் என்று சொன்னபோது.. ஆச்சி இல்லை.. இல்லை.. ஏற்கனவே இந்த ஷாட் எடுத்துட்டாங்க கண்டினியூட்டி மிஸ் ஆகிவிடும். ஏன்னா இந்த சாப்பாட்டுல தா விஷம் வச்சுருக்கு.. இததா நா சாப்பிட போறேன் என்றார்... ஏற்கனவே ஒரு ஷாட் எடுத்தாச்சு.. அதை இப்போது மாற்றினால் தப்பாகிடுமுன்னு சொல்லி அந்த கெட்டு போன சாப்பாடை எடுத்து எந்த கூச்சமும் இல்லாம, எந்த அருவருப்பும் இல்லாம அப்படியே அள்ளி அள்ளி சாப்பிட்டு முழுங்குறாங்க.

எவ்வளவு பெரிய லெஜண்ட் ஆச்சி.. கெட்டுப்போன அந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடிச்சா கூட பரவாயில்லை.. ஆனா அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க. அது அவர் சிறந்த நடிகைக்குரிய அடையாளம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி