தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ps1 Press Meet: பொன்னியின் செல்வத்தில் ஏன் வைரமுத்து இல்லை - மணிரத்னம் விளக்கம்

PS1 press meet: பொன்னியின் செல்வத்தில் ஏன் வைரமுத்து இல்லை - மணிரத்னம் விளக்கம்

Sep 21, 2022, 10:10 AM IST

google News
வைரமுத்து அற்புதமான கவிஞர். அவரது பல்வேறு சிறந்த கவிதைகளை நானும், ஏ.ஆர். ரஹ்மானும் பாடல்களாக தந்துள்ளோம். ஆனாலும் தமிழ் மொழியை பற்றி பேச புதிய திறமைகள் தேவை உள்ளது என்று பொன்னியின் செல்வன் பட இசை வெளியீட்டுக்கு வைரமுத்துவை அழைக்காதது பற்றிய கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. மணிரத்னத்தின் கனவு படமாக அமைந்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இதையடுத்து படக்குழுவினர்கள் அனைவரும் பொன்னியன் செல்வன் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

இதையடுத்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு கவிஞர் வைரமுத்துவை ஏன் அழைக்கவில்லை என்ற இயக்குநர் மணிரத்னத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், "தமிழ் மொழி பல்வேறு நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இதில் ஏராளமான புதைந்து கிடக்கின்றன. தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய இயக்குநர்கள் வருவது போல், தமிழை பற்றி பேசுவதற்கு நிறைய திறமைகள் இருக்கிறார்கள். புதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் வருவது போல் அவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

வைரமுத்து அற்புதமான கவிஞர். . அவரது பல்வேறு சிறந்த கவிதைகளை நானும், ஏ.ஆர். ரஹ்மானும் பாடல்களாக தந்துள்ளோம். ஆனாலும் தமிழ் மொழியை பற்றி பேச புதிய கவிஞர்களின் தேவையும் உள்ளது" என்றார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி