Mani Ratnam:பொன்னியின் செல்வன் ஆஸ்கருக்கு கொண்டு செல்லப்படுமா? - மணிரத்னம் பளீச் பதில்!
Apr 18, 2023, 11:04 AM IST
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆஸ்கருக்கு கொண்டுசெல்லப்படுமா என்ற கேள்விக்கு மணிரத்னம் பதிலளித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மணிரத்னத்திடம் ஏன் பாகுபலி போன்று பொன்னியின் செல்வன் படங்களை எடுக்க வில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மண்ரத்னம், “ சில சமயம் நாம் ஒரு டெம்ப்ளேட்தான் சரி என்று மனதில் வைத்திருக்கிறோம். இது இருந்தாத்தான் மக்கள் ரசிப்பார்கள என்று நினைக்கிறோம். இதை நாம்தான் முடிவு செய்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. மக்கள் வேறுவேறு விதமான படம் பார்க்கிறார்கள்.
வேறு வேறு ரசனை இருக்கிறது. படத்திற்கு படம் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகையால் அதனை ஒரு சதுரத்திற்குள் போட்டு வைக்க வேண்டும் என்ற தேவையில்லை. காட்சிகள் பிடித்தமாதிரி இருந்தாலே போதுமானது.
மேலும் PS2 திரைப்படம் ஆஸ்கருக்கு கொண்டு செல்லப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கருக்குச் சென்றது பெருமையான விஷயம். ஆனால் இந்த திரைப்படம் எடுக்கும் போது, நாங்கள் ஆஸ்கருக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க வில்லை. கல்கியோட நாவலை மக்களுக்கு பிடித்தது போல சினிமாவில் கொண்டு வரவேண்டும் என்பதே நோக்கம்” என்று பேசினார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு படம் தொடர்பான புரோமோக்களை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’பாடலானது கடந்த மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. வந்தியத்தேவனுக்கும், குந்தவை பிராட்டிக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து வரைபடமாக வெளியான அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், பாரதிராஜா, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெளியான வீர ராஜ வீரா, சிவஹோகம், PS2 ஆந்தம் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
டாபிக்ஸ்