தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mallipoo Song: மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ ரிலீஸ்

Mallipoo Song: மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ ரிலீஸ்

Aarthi V HT Tamil

Oct 05, 2022, 06:51 PM IST

google News
மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் சிம்புவின் நடிப்பானது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு வெளியான 4 நாட்கள் முடிவில், சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த படத்தின் ஹைலைட்டாக, மல்லிப்பூ பாடல் அமைந்து உள்ளது. கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை மது ஸ்ரீ பாடியுள்ளார்.

எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் இருக்கிறது. ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் இணைந்த நிலையில், மல்லிப்பூ பாடலின் வீடியோ வெளியானது. அது தற்போது வரை 1 கோடிக்கு அதிகமான முறை ரசிகர்கள் கேட்டு ரசித்துள்ளனர்.

இந்நிலையில் மல்லிப்பூ உருவான மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் இப்படி தான் மல்லிப்பூ பாடல் உருவானதா? என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி