Maharaja Box Office: துவைத்து காயவைத்த தோல்விகள்; ஆறுதல் தந்த மகாராஜா.. படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Jul 10, 2024, 07:16 PM IST
Maharaja Box Office: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது.
Maharaja Box Office: நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிமுகமே தேவையில்லை. அவரது நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
100 கோடியை தாண்டிய மகாராஜா
அதன்படி பார்க்கும் போது, மகாராஜா திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம், மகாராஜா திரைப்படம் இந்த ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில், அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியதோடு மட்டுமல்லாமல், இதற்கு முன்னதாக வெளியாகி அதிக வசூல் செய்த அரண்மனை 4 படத்தின் வசூலையும் முறியடித்து இருக்கிறது.
இருப்பினும், தமிழ்நாட்டை பொருத்தவரை, இது வரை மகாராஜா திரைப்படம் அரண்மனை 4 திரைப்படத்தின் வசூலை விட குறைவான வசூலையே வசூல் செய்திருக்கிறது. ஆம், தமிழ்நாட்டில் அரண்மனை 4 திரைப்படம் 60.23 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், மகாராஜா திரைப்படம் தற்போது வரை 55.49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
தெலுங்கிலும் கலக்கிய மகாராஜா
தெலுங்கு மார்க்கெட்டை பொருத்தவரை, மகாராஜா திரைப்படம் 14.61 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் தெலுங்கில் இந்த ஆண்டு வெளியாகி, அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக மகாராஜா மாறி இருக்கிறது. இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் இந்த திரைப்படம் 24.25 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக மகாராஜா திரைப்படம் இந்தியாவில் மட்டும் (கிராஸ்) 82.83 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், உலகளவிலான வசூலோடு சேர்த்து மொத்தமாக பார்க்கும் பொழுது, மகாராஜா திரைப்படம் இதுவரை 107. 08 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
முன்னதாக, மகாராஜா திரைப்படத்தின் கதை திருட்டுக்கதை என்று தயாரிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார்.
அவர் பேசும் போது, “மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது. 2020 ம் ஆண்டே, இந்தக்கதை என்னிடம் வந்து பேசப்பட்ட கதை. உடனே நான் நித்திலனை, இந்தப்படத்தை குறும்படமாக எடுத்து வரச்சொன்னேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். அவரும் எடுத்து வந்தார். படம் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் அதனை படமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையே, என்னுடைய படமான அத்தியாயம் 1 படத்தை எடுப்பதற்கான வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டிருந்தேன். அதற்கான நடிகர்களுக்கான கால்சீட்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், குறுக்கே மழை வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டேன். பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கினேன். ஷூட்டிங் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்னதாக, என்னுடைய படக்குழுவினர், என்னிடம் வந்து, உங்களது கதை, மகாராஜா என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.
தடுக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து நான் படத்தை பார்க்கச் சென்றேன். படத்தை பார்த்த போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்பது அப்பட்டமாக தெரிந்தது. இந்தக்கதையை நான் பதிவு செய்து வைத்த காரணத்தால், நான் சங்க தலைவர்களான பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவிடம் இது குறித்து கேட்டு, மனு அளித்தேன். ஆனால், என்னை போன்ற தயாரிப்பாளர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷால் உள்ளிட்ட சில நண்பர்கள் சிறு தயாரிப்பாளர்களை வளரவிடுங்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அப்படியான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. வேறு சிலரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதையினுடைய அம்சத்தை வைத்து பார்க்கும் போது, விஜய்சேதுபதி நன்றாக நடித்திருந்தார். தயாரிப்பாளரும் படத்தை நன்றாக தயாரித்திருந்தார். ஆனால் இயக்குநர் என்ற அந்த நாய் கதையை திருடிவிட்டது. அதற்கு ஆதாரம் உள்ளது.
நான் தான் பெயர் வைக்க வேண்டும்.
நான் பெற்ற பிள்ளைக்கு நான் தான் பெயர் வைக்க வேண்டும். சமூகத்தில் வாழ்த்தெரியாதவன் என் கதையை திருடிவிட்டான். ஒரு மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக கூட இதனை செய்து விட்டார்கள். இது என்னுடைய இரண்டாவது படமாக செய்ய இருந்தேன். படத்தின் கதையை சொன்ன போது, என்னை ஆசீர்வாதம் செய்தது நடிகர் ந்சார்லி. விரும்பி நடிக்க வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இந்தப்படத்தின் கதை சென்னையின் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் மூலம் சென்று இருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்