தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mohan G: உண்மையில் அக்கறை இருந்தால் கோயிலை சுத்தம் பண்ணுங்க... மன்னிப்பு கேளுங்க... மோகன் ஜி-யிடம் கடுகடுத்த கோர்ட்

Mohan G: உண்மையில் அக்கறை இருந்தால் கோயிலை சுத்தம் பண்ணுங்க... மன்னிப்பு கேளுங்க... மோகன் ஜி-யிடம் கடுகடுத்த கோர்ட்

Sep 30, 2024, 08:56 PM IST

google News
Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மூலம் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அத்துடன் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மூலம் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அத்துடன் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மூலம் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அத்துடன் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்த யூடியூப் சேனலிலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு அதனை விளம்பரமாக வெளியிட வேண்டும். மனுதாரர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்த வேண்டும்

பழநி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே கோயில் மீது அக்கறை இருந்தால் பழநிக்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி, நிபந்தனைகளுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம் மக்கள் மத்தியில் அடங்குவதற்குள் பழநி பஞ்சாமிர்தம் குறித்து பேசிஅடுத்த பூகம்பத்தை கிளப்பினார் இயக்குநர் மோகன் ஜி.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது எனக் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களின் இயக்குநரான மோகன் ஜி.

 

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை

இதுகுறித்து அவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலந்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த செய்தியை நான் செவி வழியாக கேள்விப்படிருக்கிறேன். ஆனால், இதுகுறித்த செய்தி மக்களுக்கு தெரியாமல் இருக்க வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையும் அழித்துவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன் எனக் கூறினார்.

 மேலும், அந்தக் கோயிலில் பணி புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தனர் என்றும் கூறியிருந்தார்.

கைது

இந்த வீடியோ வெளியானதை அடுத்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அளித்த புகாரின் காரணமாக, மோகன் ஜி கைதும் செய்யப்பட்டார். பின் அவர் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் தன்னை இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தன். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவு

அந்த மனு இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்த யூடியூப் சேனலிலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு அதனை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

பழநி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே கோயில் மீது அக்கறை இருந்தால் பழநிக்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி, நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.

இந்த தைரியத்தில் தான் பேசினேன்

முன்னதாக நான் மிகுந்த சமூக அக்கறை கொண்டவன். ஆந்திர முதலமைச்சர் திருப்பதி லட்டு குறித்த குற்றச்சாட்டுகளை பொது வெளியில் சொன்னார். அந்த தைரியத்தில் தான் நான் இங்கு, தமிழ்நாட்டில் பஞ்சாமிர்தம் குறித்து செவிவழியாகக் கேட்ட செய்தியை குற்றச்சாட்டாக முன்வைத்தேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 

ஒருவேளை என்னுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அந்தத் தவறுகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்ற சமூக அக்கறையில் தான் பேசினேன். எனக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது" என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி