தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kannathil Muthamittal:ஒரு தெய்வம் தந்த பூவே.. மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்!

Kannathil Muthamittal:ஒரு தெய்வம் தந்த பூவே.. மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்!

Feb 14, 2023, 06:15 AM IST

google News
எழுத்தாளர் சுஜாதா ‘அமுதாவும் அவனும்’ என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுத, அதை அப்படியே திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம்.. அப்படி உருவானதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆகியிருக்கின்றன
எழுத்தாளர் சுஜாதா ‘அமுதாவும் அவனும்’ என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுத, அதை அப்படியே திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம்.. அப்படி உருவானதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆகியிருக்கின்றன

எழுத்தாளர் சுஜாதா ‘அமுதாவும் அவனும்’ என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுத, அதை அப்படியே திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம்.. அப்படி உருவானதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆகியிருக்கின்றன

ஆங்கில செய்திதாளில் கிடைத்த ஒரு தகவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் மணிரத்னம் படம் ஒன்றை இயக்க முடிவு செய்கிறார். அந்தக்கருவை வைத்து எழுத்தாளர் சுஜாதா ‘அமுதாவும் அவனும்’ என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுத, அதை அப்படியே திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம்.. அப்படி உருவானதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆகியிருக்கின்றன.

எழுத்தாளர் திருச்செல்வனும், இந்திராவும் இராமேஸ்வரத்திற்கு வந்தடையும் இலங்கை அகதி ஷியாமாவின் குழந்தையான அமுதாவை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். துறுதுறுவென சுட்டியின் உச்சமாக வளரும் அமுதாவிற்கு பிறகு வினயன், அகிலன் என இரு குழந்தைகள் பிறந்தாலும், திருச்செல்வன் இந்திராவின் மொத்த அன்பும் அமுதாவிற்கே கிடைக்கிறது. அன்பு, அரவணைப்பும் மிதமிஞ்சி கிடைத்த பூரிப்பில் வாழும் அமுதாவிடன் திருச்செல்வனும், இந்திராவும் அவள் எங்கிருந்து தங்களுக்கு கிடைத்தாள் என்ற உண்மையை சொல்லுகிறார்கள்..

அதை கேட்கும் அமுதா சுக்குநூறாக நொறுங்கி போகிறாள்.. தொடர்ந்து தான் தனது நிஜ அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். பிடிவாதத்தின் பலன், திருச்செல்வன், இந்திரா, அமுதா ஆகிய மூன்றும் பேரும் இலங்கைக்கு சென்று ஷியாமளாவை சந்திக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஷியாமாவை சந்தித்தார்களா?.. சந்தித்த பின் அமுதா அவளிடம் என்ன கேட்டாள்..? இறுதியாக அவள் யாருடன் சென்றாள்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஈழப்பிரச்சினையை இணைத்து சொன்னால் அதுதான் கன்னத்தில் முத்தமிட்டாள் கதை..

திருச்செல்வனாக மாதவன்... அப்படியே எழுத்தாளர் சுஜாதாவை வார்த்தெடுத்தது போன்ற கதாபாத்திரம் .. ஃபேக்ரியில் இன்ஜினியர் வேலை செய்யும் மாதவன் வீட்டிலும், இன்னபிற இடங்களிலும் வாசிப்புக்கடலிலேயே மூழ்கியிருப்பார். அலைபாயுதே, டும் டும் டும் படத்திற்கு பிறகு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் மாதவனுக்கு எப்போதும் சிடு சிடுவென... எதுக்குமே எமோஷனல் ஆகாத அந்த கதாபாத்திரம்.. அமுதா விஷயத்தில் மட்டும் வேறு மாதிரி நடந்து கொள்ளும்.. அதனை கனகச்சிதமாக புரிந்து கொண்ட மாதவன்.. அந்தக்கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார்..

இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும்.. யாரோ ஒருவரின் குழந்தைக்காக இறுதிக்காட்சியில் குண்டடிப்பட்ட அதே இடத்திற்கு செல்லும் இந்திரா கதாபாத்திரம்.. எமோஷனின் உச்சமாக இருக்கும் அந்தக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் சிம்ரன்; எல்லாவற்றுக்கும் மேலாக பார்த்திபனின் மகள் கீர்த்தனா.. பிடிவாதமும், சுட்டித்தனமும் ஒருங்கே அமுதா கதாபாத்திரத்திடம் இருந்தாலும், அவளிடம் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டி இருக்கும்; அதனை கீர்த்தனாவிடம் திணித்து வேலை வாங்கி இருப்பார் மணிரத்னம். போராளியாக மனதையும், உடலையும் இரும்பாக மாற்றி வைத்திருக்கும் ஷியாமா கதாபாத்திரமாக வரும் நந்திதாஸூக்கு இறுதிக்காட்சியில் தனது மகளுக்காக உருகி அழும் ஒரு காட்சி போதும்.. மக்களின் மனதை வெல்ல.. முதலில் ஷ்யாமாவின் கணவனாக முதலில் மணிரத்னம் அணுகியது நடிகர் விக்ரமை.. ஆனால் அவர் மறுக்கவே.. அது சக்ரவர்த்தியிடம் சென்றது.. இன்ன பிற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரற்கு நியாயம் செய்திருந்தனர்.

 

ரோஜா, பாம்பே போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் போர் பின்னணியிலான திரைப்படம் மணிரத்னத்திற்கு.. ரொமான்ஸ், திரைக்கதை, போரின் உக்கிரம், கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக கையாளுதல் ஆகியவற்றில் இந்தப்படத்திலும் 10க்கு 10 வாங்கி இருந்த மணிரத்னம், ஈழப்பிரச்சினையை இன்னும் விரிவாக பேசியிருக்கலாம் என்ற விமர்சனம் அப்போது மட்டுமல்ல... இப்போதும் இருக்கிறது.. இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் எடுத்த மணிரத்னம்.. காடு சம்பந்த காட்சிகளுக்கு கேரளாவை பயன்படுத்திக்கொண்டார்.. மிக மிக சீரியஸான ஒரு பிரச்சினையை நோக்கி படம் சென்றுகொண்டிருக்கும்.. கொஞ்சம் பிசகுனாலும் தியேட்டரில் பாதியில் ஆடியன்ஸ் எழுந்திருக்க வாய்ப்பு.. ஆனால், அவை நடக்காமல் பார்த்துக்கொண்டது சுஜாதாவின் வசனங்கள்.. குறும்புதனம் பொங்கி வழியுமென்றே சொல்லலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏ.ஆர்.ரஹ்மான்.. மெட்டுகளில் ‘சுந்தரி.’ நெஞ்சில் ஜில் ஜில்.. ‘விடைகொடு எங்கள் நாடே’ எனவும் பின்னணி இசையில் போரின் பிரமாண்டத்தையும் கொடுத்து பக்கபலமாக நின்றார்.. வைரமுத்துவின் வரிகள் அதற்கு உறுதுணையாக நின்றன; படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் ஒரு சிம்ளன்ஸ் இருக்கும்.. அதை குலைக்காமல் ஒளிப்பதிவை அழகாக கையாண்டிருப்பார் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன்.போர் சம்பந்தமான காட்சிகளில் அட்டகாசமான ஒலிப்பதிவை கொடுத்தார் லக்சுமி நாரயணன். இப்படியான அழுத்தமான படைப்பு வணிக ரீதியாக வெற்றியை பெற வில்லை என்றாலும், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடல் வரிகள், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பு, சிறந்த படத்தொகுப்பு என 6 விருதுகள் தேசிய விருதுகள் இந்தப்படத்திற்கு வழங்கப்பட்டன.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி