HT Exclusive: ‘மதுரை நடனக்கலைஞர்கள் பற்றிய கதையில் சூரி’ - ரகசியம் பகிரும் ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாறன்!
May 17, 2023, 10:15 PM IST
அது சூரி எழுதின கதை. அவர் அப்படி மேடைக்கலைஞராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்தான்.
மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் மூலமாக குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாழ்க்கையை திரையில் தத்ரூபமாக காண்பித்து கவனம் பெற்றவர் இயக்குநர் விக்ரம் சுகுமாறன்.ஆனால் அந்தப்படத்தில் அவர் ஜாதியை தூக்கிப்பிடித்ததாக விமர்சனங்கள் எழவே, அதுவே அவரது திரைவாழ்க்கையில் கறையாக மாறி, அடுத்தப்படம் கிடைக்க பல வருடங்கள் ஆகிவிட்டன.
இப்போது ‘ராவணக்கோட்டம்’ திரைப்படத்தின் மூலம் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். சீமைக்கருவேல மர அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கூடவே எதிர்மறையான கருத்துக்களும் இந்தப்படத்தின் மீது வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இவர் அடுத்ததாக சூரியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அது தொடர்பாக விக்ரம் சுகுமாறனை தொடர்பு கொண்டு கேட்டேன்.
இது குறித்து அவர் பேசும் போது, “ஆமாம். அது படம் இல்லை. வெப் சீரிஸ். மதுரையில் இருக்கக்கூடிய மேடை நடனக்கலைஞர்கள் பற்றியக் கதை. அத அபிநயா குரூப்ன்னு கூட சொல்லுவாங்க. அது சூரி எழுதின கதை. அவர் அப்படி மேடைக்கலைஞராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்தான். அதை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் ஓகே பண்ணிருக்காங்க. நான் அந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குறேன். அதே போல வைரமுத்து சாருடைய கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகத்தை படமாக மாத்த பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு. அந்தக்கதையில விக்ரம் சாரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு.” என்றார்.
டாபிக்ஸ்