Maari : மாரி தான் என் மனைவி.. ஷாக் கொடுத்த சூர்யா, தாரா எடுத்த முடிவு!
Jul 17, 2023, 02:29 PM IST
மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சூரியாவின் கனவில் தேவியம்மா தோன்ற அவன் சந்தோஷப்படுகிறான். தேவி மாரியை நான் உனக்காக தேடி பிடித்து இந்த வீட்டுக்கு கொண்டு வந்திருக்கேன், அவளை கை விட்டதே, அவளை நல்லபடியாக பார்த்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று சொல்ல சூர்யா நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறான்.
அடுத்ததாக துக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் சூர்யா நேராக தேவி போட்டோ முன்பு சென்று விளக்கு ஏற்றி வணங்குகிறான், மறுநாள் காலையில் மாரி எழுந்து வெளியே வரும் போது தேவி போட்டோ முன்பு விளக்கு எரிவதை பார்த்து யார் ஏற்றி இருப்பாங்க என்று குழப்பம் அடைகிறாள். மேலும் வீட்டில் சூர்யா இல்லாததை பார்த்து குழப்பம் அடைகின்றனர்.
அதனை தொடர்ந்து ஜாஸ்மின் பெற்றோர் என் பொண்ணோட வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லுங்க என்று பிரச்சனை செய்து கொண்டிருக்க அதே நேரம் சூர்யா கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வருகிறான், தாரா ஜாஸ்மினோட அப்பா அம்மாவுக்கு நீயே ஒரு பதில் சொல்லு என்று சொல்ல அவன் நான் மாரிக்கு தொட்டு தாலி கட்டி இருக்கேன், என்னுடைய மனைவி மாரி தான், என்னால அவளுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய முடியாது என்று சொல்ல தாரா, ஜாஸ்மின் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சூர்யாவின் பேச்சை கேட்டு மாரி சந்தோஷமடைய தாரா என்னுடைய மகனின் வார்த்தையை நான் மதிக்கிறேன், உங்க பொண்ணுக்கு நானே நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என வாக்கு கொடுக்க ஜாஸ்மின் இதை கேட்டு இன்னும் ஷாக் ஆகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்