Maari Serial : தேவியுடன் ஜெகதீஷ்க்கு நடந்த 60-ம் கல்யாணம்.. வசமாக சிக்கிய ஸ்ரீஜா!
Jun 02, 2023, 05:00 PM IST
மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் 60-ம் கல்யாணத்தில் ஜெகதீஷ் தாரா கழுத்தில் தாலி கட்ட போன நிமிடம் மோர் அவள் மேல் கொட்டி தாரா டிரஸ் மாற்ற சென்றதும் தேவியம்மா மணகோலத்தில் மேலே இருந்து இறங்கி வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தேவியம்மா இறங்கி வருவதை பார்த்த மாரி சந்தோசப்பட ஜெகதீஷ் கண்ணுக்கும் தேவி தெரிகிறார். அவரும் சந்தோசப்பட எல்லாரும் ஒன்றும் புரியாமல் நிற்கின்றனர். இதனையடுத்து மாரி நான் சொன்ன மாதிரியே தேவியம்மா வந்துட்டாங்க தாலி கட்டுங்க மாமா என்று ஜெகதீஷிடம் சொல்ல எல்லாரும் குழப்பம் அடைகின்றனர்.
ஜாஸ்மின் அங்க யார் இருக்காங்க லூசு மாதிரி பேசுற என கேட்க ஜெகதீஷும் தேவி வந்துட்டா என தாலி காட்டுகிறார், பிறகு தாரா டிரஸ் மாத்தி வெளியே வந்து நடந்த விஷயங்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இந்த சமயம் பார்த்து மேல மாடியில் ரூமை சுத்தம் செய்ய போன வேலைக்காரி சத்தம் போட எல்லாரும் பதறி ஓடி போய் பார்க்க அங்கு தேவியம்மா போட்டோவில் ஜெகதீஷ் கட்டிய தாலி தொங்குகிறது.
இதனை பார்த்து வீட்டில் உள்ள எல்லாரும் சந்தோசப்பட தோற்று போன கோபத்தில் தாரா டீம் உள்ளது. அதன் பிறகு தாரா தனது டீமுடன் கலந்து பேசும் போது மொத்த சொத்தையும் சூர்யா பெயருக்கு மாத்தி எழுதி ஜாஸ்மினை அவனுக்கு கட்டி வைத்து எல்லா சொத்தையும் நம்ம அடையனும் என திட்டம் போடுகிறாள்.
இந்த சமயம் ஸ்ரீஜா ஊரில் சூர்யாவுக்கும் மாரிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்த போது கட்டிலில் போல்டை கழட்டி அதை தடுத்த விசயத்தை சொல்ல ஹாசினி இதனை கேட்டு விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்