Thalaivar 171: டானுக்கெல்லாம் டான்.. டைட்டில் டீசர் குக்கிங்…தேதியை அறிவித்த லோகேஷ் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இங்கே!
Mar 28, 2024, 07:13 PM IST
“ரஜினிகாந்திடம் எப்போதும் போன் மூலம் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். அடுத்த திட்டங்கள், பணிகளில் பிஸியாக இருப்பதால் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை.” - லோகேஷ்!
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் படத்தின் தலைப்பு வருகிற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற காமிக் கான் விழாவுக்கு சென்றிருந்த லோகேஷ் கனகராஜ், பிரபல காமிக் புத்தகமான என்ட்வார்ஸ் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது Thalaivar 171 படம் குறித்து அவரிடம் கேட்டபோது, " Thalaivar 171 படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும்.
ரஜினிகாந்திடம் எப்போதும் போன் மூலம் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். அடுத்த திட்டங்கள், பணிகளில் பிஸியாக இருப்பதால் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை." இவ்வாறு அவர் கூறினார்
Thalaivar 171 படப்பிடிப்பு விரைவில் தொடங்கி 2025இல் மிக பிரமாண்டமாக திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.
ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமா ஹீரோ ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகிய ‘இனிமேல்’ பாடல் வெளியானது. இதன் மூலம் நடிகராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பேட்டி ஒன்றில் அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய திரைப்படங்களில் காதலுக்கான இடம் கம்மியாக இருப்பதையும், நான் கதாநாயகிகளை கொன்று விடுவதையும் குறிப்பிட்டு, இவர் எப்படி இப்படியான ஒரு ரொமான்டிக் பாடலில் நடித்தார் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.
ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.
நான் அவர்கள் வேறு எதற்காகவோ அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனையடுத்து அவர்கள் விஷயத்தை சொன்னார்கள். நான் ஸ்ருதிஹாசனை சந்தித்தேன். அவரை பார்த்த உடனேயே நான் சிரித்து விட்டேன்.
அதன் பின்னர் பாடலை கேட்டேன். கொஞ்சம், கொஞ்சமாக ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது என்று தோன்றியது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏதாவது கேட்டு வந்தால், அதற்கு என்னால் நோ சொல்ல முடியாது.” என்று பேசினார்.
ஸ்ருதிஹாசன் பேசும் பொழுது, “நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருப்பேன். இவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார். கொஞ்சம் விட்டால் இவள் எரிச்சலை கிளப்பி விடுவாள் என்று ஓகே சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இதுதான் கான்செப்ட் என்று அவர் புரிய வைத்தார். நான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை. நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற சோனுக்குள்ளும் நான் என்றைக்கும் சென்றது கிடையாது.
அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்தான ஸ்கிரிப்ட் புக் எனக்கு கொடுக்கப்பட்டது. நான் படித்தேன். பாடலின் இயக்குநர் துவாரக்கை சந்தித்தேன். மொத்த குழுவையும் என்னை சந்திக்க வைத்தார்கள்.
தினசரியும் அந்த டைரக்ஷன் டீம் என்னை சந்தித்துக் கொண்டே இருந்தது. நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டது ‘ஒய் மி’ என்பதுதான். ஷூட் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட, நான் கான்ஃபிடன்ட்டாக இல்லை.
அங்கே சென்று என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த டீமுடன் நான் தினசரி சந்தித்த சந்திப்புகள், எனக்கு ஒரு விதமாக செளகரியமான நிலையை கொடுத்து, இந்த முடிவை எடுக்க வைத்தது. யாரும் காரி துப்பாத அளவிற்கு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்