தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைய வாய்ப்பா..?.. எப்போது நடக்கும்.. - விழா மேடையில் ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைய வாய்ப்பா..?.. எப்போது நடக்கும்.. - விழா மேடையில் ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

Dec 09, 2024, 07:19 PM IST

google News
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்

கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்

மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த வெற்றியின் மூலம் விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த அவர், பின்னர் தன்னுடைய ஆதர்ச நாயகன் ஆன கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்தார். 

மாபெரும் வெற்றி 

விஜய் சேதுபதி கமல்ஹாசன் பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதையெல்லாம் களையும் வகையில் தான் தற்போது அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் கூலி படத்தை உருவாக்கி வருகிறார். 

இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் பற்றி பேசினார் அப்போது அவர் பேசும் பொழுது கமல்ஹாசனை நேரில் பார்த்தால் போதும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவரை இயக்கும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மீண்டும் நான் அவருடன் இணைய இருக்கிறேன். " என்று பேசினார். இதன் மூலமாக அவர் மீண்டும் விக்ரம் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் மும்மரமாக பணியாற்றி வருகிறார். ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக அவர் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கம்போல லோகேஷ் கனகராஜின் கடந்த படங்களில் மிகப்பெரிய தூணாக விளங்கிய அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை எடுக்க இருக்கிறார். அந்தப் படத்தில் கைதி 1 படத்திற்கு இசையமைத்த சாம் சி எஸ் இசையமைக்க இருக்கிறார். இதற்கிடையே தயாரிப்பிலும் மும்முரமாக ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ் fight club என்ற திரைப்படத்தை வாங்கி தன்னுடைய பேனரின் கீழ் வெளியிட்டார்.

 அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்போது தன்னுடைய எழுத்தில் உருவாகியுள்ள பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ரெமோ சுல்தான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஆச கூட பாடல் மூலமாக பிரபலமான சாய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி